மாலைமலர் : உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி
வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் ஆணையரை
சந்தித்து புகார் மனு அளித்தார். திமுகவின் வெற்றியை தடுக்க சதி நடப்பதாக
அவர் கூறினார்.
தமிழகத்தில்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணி அதிக
இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் குளறுபடிகள் காரணமாக
வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. முறைகேடுகள் நடப்பதாக திமுக
முகவர்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதமாக அறிவிக்கிறார்கள்.
எடப்பாடியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். சேலம் கொளத்தூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றும் அதனை அறிவிக்கவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தபடி அதிகாரிகளுக்கு, முதல்வரின் மைத்துனர் உத்தரவிடுகிறார். துணை முதல்வரின் போடி பகுதியில் வெற்றி நிலவரத்தை அறிவிக்கவில்லை. விளாத்திகுளத்தில் 3 வாக்குப்பெட்டியைக் காணவில்லை என புகார் வருகிறது.

அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனவே தேர்தல் ஆணையத்தில் வந்து புகார் அளித்துள்ளேன்.
தேர்தல்
முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். தேர்தல் ஆணையத்தில்
உண்ணாவிரதம் இருப்பதா அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா?
என்பதை பின்னர் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக