மாலைமலர் : நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே சென்னை மயிலாப்பூரில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக