nakkheeran.in - ஆதனூர் சோழன் :
தேவதாசி
என்ற வார்த்தை அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி
என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த
வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு
கற்பிக்கப்படுகிற அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள
முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம்.
> தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர் என்கிறது வரலாறு. தேவதாசி என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உயர்ந்தபட்ச கொதிநிலைக்கு சிலர் ஆளாவது ஏன் என்பதற்கு முடிந்த அளவுக்கு விளக்கம் சொல்வதே நமது நோக்கம்.
இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். அப்போது, சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் தெய்வக் குற்றமாகிவிடும் என்றார். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள் என்றார். தெய்வப்பணியில் ஈடுபடுபவர்களே தேவதாசிகள் என்றார்.
ஆனால், அவருக்கு பதில் கொடுத்த முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், இதுவரை ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைப்பணி ஆற்றினார்கள். இனி, உங்கள் குலத்தை சேர்ந்த பெண்கள் இறைப்பணியாற்ற தேவதாசிகள் ஆகலாமே என்று கேட்டார். இவ்வாறுதான் மனிதர்களின் காம இச்சையால் கொச்சைப்படுத்தப்பட்ட தேவதாசிகளின் எதிர்காலம் மரியாதைமிக்கதாக மாற்றப்பட்டது என்பது வரலாறு

மிகப் பழமையான காலத்திலேயே தேவதாசி முறை
இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்று கருதப்படும் சிந்து
சமவெளி நாகரித்திலேயே நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது.
நாட்டியப் பெண்மணியை சித்தரிக்கும் மிகச்சிறிய வெண்கலச் சிலை
கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்களின் ரிக் வேதத்திலும் கூட நடனமாதுகள்
பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம்
வர்ணிக்கிறது. அதன்பிறகு வந்த புராணங்களிலும் இந்த நடனமாது கதாபாத்திரம்
வருகிறது.
தேவதாசி என்ற வார்த்தை பலவிதமாக
பயன்படுகிறது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும், கொங்கனியில்
நாயகி என்று், மராட்டியத்தில் பாசவி என்றும், கர்நாடாகவில் சூலி, சானி
எனவும், ஒடிஸாவில் மக எனவும், உத்தரப்பிரதேசத்தில் பாலினி எனவும்
தேவதாசிகளை அழைக்கிறார்கள்.
சங்க
இலக்கியங்கள் கலையறிந்த பெண்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி,
பெண்டுகள் என்று அடையாளப்படுத்துகின்றன. இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லா
வகையிலும் அந்தப் பெண்களை பெருமைப்படுத்துவதாகவே இருப்பதாக அறிஞர்கள்
கூறியுள்ளனர். சைவ மற்றும் வைணவ மதங்களில் உள்ள ஆகமங்கள் இத்தகைய பெண்களை
ருத்ர கன்னிகைகள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் உடலாலும், மனதாலும்
தூய்மையானவர்கள், சொல் மற்றும் செயலில் அறிவு மற்றும் பொறுமை உடையவர்கள்.
தோற்றத்தில் இளமையும் மென்மையும் உடையவர்கள் என்று தெரிவிக்கிறது.
சைவ சமயக் குறவர்களில் முதன்மையான
திருநாவுக்கரசரும் தேவதாசிகளை போற்றிப் பாடுகிறார். சுந்தரமூர்த்தி
நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்கிறார்கள். இவர்கள்
இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று என்கிறார்கள்.
தேவதாசிகளில் இரண்டுவகை இருக்கிறார்கள்.
முதல்வகை பதியிலார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யாரையும் கணவனாக
ஏற்காமல், இறைவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள்.
இவர்களுக்கு நித்ய சுமங்கலிகள் என்ற பெயரும் உண்டு. இரண்டாவது வகையினர்
ருத்ர கன்னிகைகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் சன்னிதானத்தில்
நாட்டியம் ஆடினாலும், தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இல்லறம்
நடத்தினார்கள். கணவனோடு வாழ்ந்தாலும், கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் இவர்கள்
மிகவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், பிற்காலச் சமூகமே
இவர்களை வேறு பாதைக்கு மாற்றியது என்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களையே
இப்போது தேவதாசி பரம்பரையினர் என்று இப்போது கூறப்படுகிறது. ஆனால் இது
உண்மையில்லை. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்களும் தேவதாசிகளாக
இருந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொல்கிறார்கள். ஆதி சமூகத்தில்
குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு
அர்ப்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கம் அந்தணர்,
மறவர், வேளாளர் என்று சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்தும்
இருந்ததாக கூறுகிறார்கள். தேவதாசி பரம்பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததால்
தங்களை ஒரு சமுதாயமாக அறிவித்துக் கொண்டதாக கருதலாம்.
ஆலயங்களில் தேவதாசிகளின் கடமை புனிதமானதாக
கருதப்பட்டது. காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி
செய்வது இவர்களுடைய பணி. அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு மூர்த்தியை
பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும்போதும், லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு
பாடல்களை பாட வேண்டும். ஒரு ஆலயத்தில் பல தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து
பணி செய்தார்கள். ஆடல், பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை
பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்தார்கள்.
சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்புவரை
பட்டர்களைப் போலவே தேவதாசிகளும் கருவறைவரை சென்று வந்தனர். இதற்கான
ஆதாரங்கள், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், திருவாரூர் தியாகராஜர்
ஆலயத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த, சமண துறவிகளின் பள்ளிகளிலும்
தேவதாசிகள் பணிபுரிந்துள்ளனர். புத்தரேகூட தனது இறுதிக் காலத்தில்
அமிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாகப் பெற்று சங்கம்
நிறுவ பயன்படுத்தியதாக யுவான் சுவாங் குறிப்புகளில் உள்ளது.
வரலாற்றில் பல தேவதாசிகளின் பொதுத்
தொண்டுகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தில் பணிபுரியும்
தேவதாசி இறந்துவிட்டால் அவளது உடலை ஆலய மூல மூர்த்திக்கு போர்த்தப்படும்
புனித ஆடையை போர்த்தியே எடுத்துச் செல்வார்கள். அன்று முழுவதும் ஆலய
வழிபாடு நிறுத்தப்படும். மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முன்,
ஆலயத்தின் ராஜகோபுரத்தின் முன் சிறிது நேரம் ஊர்வலம் நிறுத்தப்படும்.
தேவதாசிகள் ஒழுக்கமற்றவர்களாக இருந்திருந்தால் இத்தகைய மரியாதைக்கு அன்றைய
சமூகம் ஒப்புக்கொண்டிருக்குமா? ஊர்வலம் சென்று திரும்பும் உற்சவ
மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் உரிமை தேவதாசிக்கு வழங்கப்பட்டது.
சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின்
துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவதாசி முறை
பின்னர் ஏன் அவமானச் சின்னமானது? தேவதாசி பரம்பரையில் ஒழுக்கக்கேடு திடீரென
வந்துவிடவில்லை. ஆதியில் மூத்த மகளை தேவதாசியாக நேர்ந்து விடும் பழக்கம்
இருந்தது. ஆனால், பிற்காலத்தில் சற்று வசதி வந்தபிறகு, மூத்த மகளை
தேவதாசியாக்க விரும்பாத சிலர் வேறு ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக
நேர்ந்து விடும் பழக்கம் தொடங்கியது. இப்படிப்பட்ட குறுக்குப்
புத்திகளுக்கு வளைந்து கொடுக்கிற வகையில் அன்றைக்கும் சட்டமும் சமூக
வழக்கமும் மாறிப்போனது. வசதியற்ற பெண்ணை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை
உருவானபிறகு, இறைவன் முன் மட்டுமே நடனமாட வேண்டிய தேவதாசி அரசன் முன்னும்
ஆடலாம் என்ற நிலையும் எளிதாக அறிமுகமாகிவிட்டது.
ராஜாதிராஜ சோழன் காலத்தில் 1174ல் பணக்கார
வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்கக் காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு
கோவிலுக்கு அர்ப்பணம் செய்ததாக கல்வெட்டு இருக்கிறது. நாளடைவில்,
அரசர்களும், அவர்களுக்கு கீழான சிற்றரசர்களும், ஜமீன்தார்களும்,
பண்ணையார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டனர்.
அதுவே அவர்களுடைய பணச் செருக்கின் அடையாளமாக கருதப்படும் நிலையும்
உருவானது.
பக்தியையும், பரதத்தையும், இசையயும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நில உடமையாளர் ஆதிக்கம் நிறை பகுதிகளில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னமாக கருதப்பட்டனர். பணக்கார வீடுகளில் விருந்தினர்களை சந்தோஷப்படுத்தவே பல ஏழைப் பெண்கள் பாலியல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.
மனிதர்களின் வக்கிரபுத்தியால், தெய்வீகமாக கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை அவமானகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. வயதான தேவதாசிகள் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்தியையும், பரதத்தையும், இசையயும் வளர்த்த தேவதாசிகளை தஞ்சை போன்ற நில உடமையாளர் ஆதிக்கம் நிறை பகுதிகளில் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவமானச் சின்னமாக கருதப்பட்டனர். பணக்கார வீடுகளில் விருந்தினர்களை சந்தோஷப்படுத்தவே பல ஏழைப் பெண்கள் பாலியல் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர்.
மனிதர்களின் வக்கிரபுத்தியால், தெய்வீகமாக கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை அவமானகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. வயதான தேவதாசிகள் பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட அவமானகரமான சூழலில் சிக்கிய பெண்களை மீட்கத்தான் மூவலூர் ராமமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் சட்டபூர்வமாக முயற்சி செய்தனர். தேவதாசி முறையை பூண்டோடு ஒழித்துக்கட்ட சட்டமியற்ற வேண்டும் என்று அவர்கள் போராடினார்கள். அப்போது, சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஒழித்தால் தெய்வக் குற்றமாகிவிடும் என்றார். அவர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள் என்றார். தெய்வப்பணியில் ஈடுபடுபவர்களே தேவதாசிகள் என்றார்.
ஆனால், அவருக்கு பதில் கொடுத்த முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள், இதுவரை ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைப்பணி ஆற்றினார்கள். இனி, உங்கள் குலத்தை சேர்ந்த பெண்கள் இறைப்பணியாற்ற தேவதாசிகள் ஆகலாமே என்று கேட்டார். இவ்வாறுதான் மனிதர்களின் காம இச்சையால் கொச்சைப்படுத்தப்பட்ட தேவதாசிகளின் எதிர்காலம் மரியாதைமிக்கதாக மாற்றப்பட்டது என்பது வரலாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக