புதன், 1 ஜனவரி, 2020

தமிழ் பேச்சுக்கு வலிமை சேர்த்த கலைஞர் .... தோள்வலியும் தோளில் வலியும் ...

Muralidharan Pb ; ஒரு தலைவரின் பிறந்த நாள் விழாவில் வாழ்த்துரை வழங்க கலைஞர் மற்றும் பலர் வந்திருந்தனர்.
ஒரு பத்திரிகை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கிப் பேசும்போது, "இதோ,இங்கே விழா காணும் தலைவர் உண்மையிலேயே ஒரு தலைவனுக்குரிய திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர். சில தலைவர்களைப்போல தோள்வலி, கழுத்துவலி,கைவலி என்று மருத்துவமனை போய் படுத்துக் கொள்பவர் அல்ல" என்று பேசினார்.
அவ்வளவுதான்"! விழாமண்டபத்தில் கூடியிருந்தவர்கள், " பேச்சை நிறுத்து....
அண்ணாவை பழிக்காதே!" என்று கூச்சலிட ஆரம்பித்தனர்.

காரணம், அந்த சந்தர்ப்பத்தில் சிறைதண்டனைப் பட்டிருந்த அறிஞர்அண்ணா , தோளில் ஏற்பட்ட வலி காரணமாக. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனவே அவரை கேலி செய்வது போல அந்த பத்திரிகை ஆசிரியர் பேச்சு அமைந்ததாலேயே மண்டபத்தில் கலாட்டா ஏற்பட்டது.
அந்தச் சூழ்நிலையில் விழா அமைதியாக நடந்து முடியவும் அந்த பத்திரிகை ஆசிரியர் தவறாகப் பேசி விட்டதைச் சமாளித்து அனைவரையும் சமாதானம் அடையச் செய்யவும் கலைஞர் விரும்பினார்.

எனவே மைக் முன் நின்று கொண்டிருந்த அந்த பத்திரிகை ஆசிரியரை அமரச்செய்துவிட்டு, கலைஞரே பேச முன் வந்தார், அவர்கூறினார்.
"அன்பர்களே.....
தோள்வலி, கழுத்துவலி, கைவலி என்று நண்பர் பேசியதை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டீர்கள்!
கரிகால் பெருவளத்தானையும்
கடல்கடந்த சோழனையும்
இமயவரம்பனையும்
இணையிலா பாண்டியனையும்
தோள்வலி மிக்கவர்கள்,
கைவலி கொண்டவர்கள் என்று போற்றுவதுண்டு.....
வலி என்றால் தமிழிலே "வேதனை" என்ற பொருள் மட்டுமல்ல. 'வலிமை," என்ற பொருளும் இருக்கிறது.
எனவே நண்பர் "வலிமை" என்ற அர்த்தத்திலேயே பாராட்டிப் பேசினார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்!" என்று #கலைஞர் அழகிய விளக்கம் அளித்ததும் கூட்டத்தினர் கோபத்தை மறந்து சிரித்து மகிழ்ந்தனர்.
#அவர்தான்கலைஞர்.
.dmk advocate gtr cbe.

கருத்துகள் இல்லை: