விமல் வீரவன்சா ( மகிந்தா கட்சி): முதன் முதலாக எமது நாட்டு பெயர் பலகை ஒன்றில் தமிழ் முதலாவதாகவும் சிங்களம் இரண்டாவதாகவும் எழுதியிருப்பது .....
லங்கா ஈ நியூஸ் : பல தனியார் ஊடகங்களில் தற்காலத்தில் விசேட
செய்தியாக யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டமை தொடர்பில் காணப்படுகிறது. எனினும் இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது ஊடகங்களின் பிரதான தலைப்பாக இடம் பிடிக்கவில்லை.
இலங்கையில் ஊடகங்கள் பல காலங்களாக இவ்வாறு செயல்பட்டு
வருகின்றன. ஏதாவது ஒரு மோசமான விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு இனவாத அடிப்படையில் அதனை மாற்றியமைத்து தங்களது மடியை நிரப்பிக் கொள்ளவே எமது நாட்டின் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இது புதிய கலாச்சாரமாக மாறி உள்ளது.
வைத்தியர் ஷாபி சிங்கள தாய்மாருக்கு கருத்தடை செய்ததான செய்தியை பிடித்துக்கொண்டு அந்த மலசலக் குழிக்குள் நீந்தி சுகம் அனுபவித்த இனவாதிகள் தற்போது மொழி விடையத்தை வைத்துக்கொண்டு இதுபோன்ற மலசல குழிக்குள் விழுந்து புகழ் தேட பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நபர்களுக்கு யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர் பலகை விடயம் சுய இன்பம் காண கூடியதாக அமைந்துள்ளது.
இந்த பெயர் பலகை நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் யாப்பின் விதி முறைகளுக்கு அமையவே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த முட்டாள் இனவாதிகள் அறியமாட்டார்கள். இல்லையேல் தெரியாதது போல நடிப்பார்கள்.
இந்த விடயத்தில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் சட்டத்தரணி துலாம் தசநாயக்க இவ்வாறு கூறுகிறார்.
நாம் 13வது அரசியல் யாப்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்து நாட்டில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்கும் சமமான இடத்தை வழங்கி உள்ளோம்.
அதன்படி மொழி தொடர்பில் அரசியல் யாப்பு திருத்த சட்டத்தில் நான்காவது ஏற்பாட்டில் அரச மொழிகளாக சிங்கள மொழியுடன் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டது. இதில் அரசியல் யாப்புத் திருத்தத்தினை 18 சரத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
"18 (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் ஆகும்.
(2) தமிழ் மொழியும் அரச கரும மொழி ஆகும்.
(3) ஆங்கிலம் கூட்டணி மொழியாகும்"
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் இலங்கையின் தேசிய மொழி என 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை நாட்டில் ஏற்பாடு செய்யப்படுகின்ற அரச நிகழ்வுகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளுக்கு சமநிலை வழங்கப்படுவது அடிப்படை சட்ட ஏற்பாடு என்பதுடன் அரசியல் யாப்பை மதிப்பதாகவும் அமையும். மேலும் தமிழர்களை இலங்கை பிரஜைகள் என்று ஏற்றுக் கொள்வதாகவும் அமையும்.
இந்த சட்டத்திற்கு மிகவும் முக்கியமான அம்சமாக அமைவது அரசியல் யாப்பின் 22ஆவது ஏற்பாடாகும். இலங்கையின் நிர்வாக மொழி என்னவாக அமைய வேண்டும் என்பதையும் அத்துடன் அந்த நிர்வாக மொழி பயன்படுத்தக்கூடிய முறை தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. இந்த யாப்பின் 16வது திருத்தத்தின் படி உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையின் நிர்வாக மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் காணப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்களம் நிர்வாக மொழியாக காணப்பட வேண்டும். எனவே வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரச நிகழ்வுகளுக்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின்படி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்க ஏற்பாடு உள்ளது. அதுமத்திரமன்றி 22 ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள மொழி அல்லது கூட்டணி மொழியாக ஆங்கிலம் என்பவற்றில் தமது தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புபவர்கள் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்து அதனை ஈடு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளும் அரசியல் யாப்பில் உள்ளன.
எனவே யாழ்ப்பாண விமான நிலைய திறப்பு விழாவின்போது பெயர்ப்பலகையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என்ற வரிசையில் மொழி பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை அரசியல் யாப்பிற்கு உட்பட்டதே என்பதை உணர்ந்து கொள்ளலாம். இங்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை வடக்கில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கையில் தங்களுக்கும் தங்களது மொழிக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால் இலங்கை பிரஜைகளாக கௌரவமாக கருதுவர்.
அரசியல் யாப்பிற்கும் இலங்கை நாட்டின் பிரஜைகளான தமிழர்களுக்கும் கவுரவம் செலுத்தும் வகையில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை தொடர்பில் இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு தமிழர்களாக இருப்பது இந்நாட்டில் பிரச்சினைக்குரிய விடயமல்ல என்பதை உணர்த்தவும் வேண்டும்.
நன்றி : லங்கா ஈ நியூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக