புதன், 23 அக்டோபர், 2019

பஞ்சமி நில விவாதங்கள் திசை திருப்படுகிறது?

Don VS : தமிழ்நாட்டின் எதிட்கட்சித் தலைவர் அசுரன் படம் பார்க்கிறார் ; பார்த்துவிட்டு, பஞ்சமி நிலம் + ஜாதியம் குறித்து டிவிட் செய்கிறார்.
எதிர் கட்சித் தலைவரின் இந்த டிவிட்டை, ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக திருப்பி, பஞ்சமி நிலம் தொடர்பாக பேச வைத்திருக்க முடியும். குறைந்த பட்சம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றாவது அதிமுக அரசை நிர்ப்பந்தம் செய்திருக்க முடியும். குறைந்தபட்சம் அதிமுக நடவடிக்கைகள் குறித்து விவாதமாவது கிளம்பியிருக்கும்.
ஆனால், என்ன நடந்த்து? தன் அரசியல் வாழ்வில் பொய்யை மட்டும் பேசும் ஒரு ஜாதி வெறிபிடித்த அரசியல்வாதி, முரசொலி நிலம் தொடர்பாக வதந்தியை கிளப்புகிறார். உடனேயே, அனைத்து திமுக /திராவிட ஒவ்வாமை உடைவர்களும், அதையே பிடித்துக்கொண்டு திமுகவை கழுவில் ஏற்ற துவங்குகின்றனர். திமுக /திராவிட ஆர்வலர்கள் இந்த வதந்திக்கு பதில் சொல்லப்போக, அதிமுக அமைதியாக நழுவி விடுகிறது.
இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால், திமுகவை திட்டுவதா அல்லது பஞ்சமி நிலமா என்றால், தூய தலித்திய போராளிகள் கூட, திமுகவை திட்டுவதையே விரும்புவார்கள்.
இதில், அந்த ஜாதி வெறி அரசியல் வாதி, தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்று ஏற்படுத்தி, ஊர் ஊராக ஜாதி வெறியை கக்கியவர். அவர் என்றாவது பஞ்சமி நிலம் குறித்து கவலைப்படுவாரா என்று கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை: