Hemavandhana
- /tamil.oneindia.com :
பெங்களூரு: மொத்தம் 20 பெண்கள்.. கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் கொன்ற
சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை நடந்த சம்பவம் இது: கர்நாடக மாநிலத்தை
சேர்ந்தவன் மோகன். பெண் பித்தன்.. எந்த பெண்ணை பார்த்தாலும் விடுவது
இல்லை.. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியே நெருங்கி அவர்களை நாசம்
செய்துவிடுவான்.
அவர்களுடன் ஜாலியாக இருந்து கடைசியில் கொலையும் செய்துவிடுவான்.. இவன் முழு
நேர வேலையும் இதுதான்.. இவன் ஒரு சைக்கோ கில்லர்!
2003 முதல் 2009-ம் ஆண்டு வரை மட்டும் 20 பெண்களை ஏமாற்றி
கொன்றிருக்கிறான். அத்தனை பெண்களுக்கும் சயனைடு தந்துதான் கொலை
செய்துள்ளான். அதனால் சயனைடு மோகன் என்றே அழைக்கப்பட்டான்.
ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் மரண தண்டனை மோகனுக்கு கிடைத்துள்ளது. இப்போது
4வது வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு பெங்களூரு
கெம்பேகவுடா பகுதியில் ஒரு பெண்ணை சீரழித்து இதே போல கொன்றதற்காக இந்த
தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதலில் வேலை வாங்கி தருவதாக பெண்களிடம் பேச்சு
கொடுப்பார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பெண்கள் இவரிடம் தொடர்பு
கொள்வார்கள்.
கழுத்து நிறைய நகை போட்டு வந்தால்தான் வேலை கிடைக்கும் என்பார்.
பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறுவார்.. இதற்கு பிறகு
உல்லாசமாக இருப்பார். ஜாலியாக இருந்துவிட்டு காலையில் ஒரு மாத்திரை
தருவார். அது என்ன என்று அந்த பெண் கேட்டால் கர்ப்பதடை மாத்திரை என்பார்.
ஆனால் அதுதான் சயனைடு.. அதை வாங்கி அந்த பெண் சாப்பிட்டதும், அங்கேயே
விழுந்து உயிரிழந்துவிடுவார். உடனே நகைகளை அள்ளிக் கொண்டு எஸ்.ஆகிவிடுவார்.
காதலிக்கும் பெண்களிடம், போலியான பெயர்களை சொல்லிதான் ஏமாற்றுவார். அதுவும்
அந்த பெண்களின் ஜாதி பெயர்களை தனக்கு சூட்டிக்கொள்வது இவர் ஸ்பெஷலாட்டி..
இந்த மோகன் ஒரு ஸ்கூலில் சயின்ஸ் டீச்சர் என்பது கூடுதல் தகவல்.
2007 ஆம்
ஆண்டு மியூசிக் டீச்சர் ஒருவரை இதுபோல கொன்ற வழக்கில்தான் மோகனின் விஷயம்
வெளியே தெரிய ஆரம்பத்தது. அதற்குபிறகுதான் இவன் ஒரு சைக்கோ கில்லர் என்பதை
போலீசார் கண்டறிந்தனர். இவன் மேல் உள்ள பெரும்பாலான குற்றங்கள்
நிரூபிக்கப்பட்டு விட்டன.
தூக்கு
தூக்கு
கடத்தலுக்கு 10 வருஷம், பலாத்காரத்திற்கு 7 வருஷம், விஷம் கொடுத்து
கொன்றதுக்கு 10 வருஷம், கொள்ளைக்கு 5 வருஷம், மோசடிக்கு ஒரு வருஷம்,
ஆதாரங்களை அழித்ததற்கு 7 வருஷம்.. இப்படி ஏகப்பட்ட தண்டனைகள் மோகனுக்கு
விதிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த மரண தண்டனையை ஐகோர்ட் உறுதி
செய்யப்படும் வரை இந்த எல்லா தண்டனைகளும் ஒரே நேரத்தில் மோகன் அனுபவிக்க
வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
Read more at: https://news/bangalore/serial-killer-cyanide-mohan-sentenced-to-death/articlecontent-pf408903-366578.html
Read more at: https://news/bangalore/serial-killer-cyanide-mohan-sentenced-to-death/articlecontent-pf408903-366578.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக