வெள்ளி, 25 அக்டோபர், 2019

பங்களாதேஷ் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை


Nusrat-Jahan-Rafi வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை Nusrat Jahan Rafi e1571951935541Nusrat-Jahan-Rafi-protest-630x420 வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை Nusrat Jahan Rafi protest    வீரகேசரி:  பங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வங்காளதேசம் தலைநகர் தாகாவில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள பெனி பகுதியை சேர்ந்தவர் நுஸ்ரத் ஜஹான் ரபி. 19 வயதான இவர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளியில் கல்வி பயின்று வந்தார். அந்த கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கடந்த மார்ச் மாதம் 27 தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியரை விடுதலை செய்யுமாறு உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் பள்ளியின் சில மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


பின்பு ஏப்ரல் 6ம் தேதி இறுதித்தேர்வை எழுதுவதற்காக நுஸ்ரத் பள்ளிக்கு சென்றார். அப்போது சக மாணவி ஒருவர் அவரை பள்ளியின் மேல் தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு பர்தா அணிந்த நான்கைந்து பேர் நுஸ்ரத்தை சூழ்ந்து கொண்டு தலைமை ஆசிரியருக்கு எதிரான பாலியல் வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினர். நுஸ்ரத் மறுத்ததால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த காவல் துறை அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மரண வாக்குமூலம் அளித்த நுஸ்ரத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தற்கொலையாக காட்ட வேண்டும் என கொலையாளிகள் முயற்சி செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
நுஸ்ரத்தின் மரணம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை தூண்டியது. ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களிலும் நுஸ்ரத்தின் வழக்கில், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் எனவும் பெண்களுக்கான பாலியல் தொல்லைகளுக்கு முற்றுபுள்ளி வைக்குமாறும் அரசை வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் கவனத்திற்கும் சென்றது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள், உடனடியாக தண்டனை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிகபட்ச தண்டனையாக 16 பேருக்கும் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து நுஸ்ரத்தின் வழக்கறிஞர் கூறுகையில், ‘வங்காளதேசத்தில் இது போன்ற கொடூரமான கொலைகளை செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு சான்று’ என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: