திங்கள், 21 அக்டோபர், 2019

காரப்பன் சில்க்ஸ்’ துணிக்கடையை சீர்குலைக்க ஆர் எஸ் எஸ் .... வடநாட்டு வியாபாரிகளின் அடாவடி


கோயம்புத்தூரை அடுத்த சிறுமுகை என்ற ஊரை சேர்ந்தவர் காரப்பன்.
’காரப்பன் சில்க்ஸ்’ என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் இவர் சமீபத்தில் திராவிடர் கழக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அத்திவரதர் மற்றும் கிருஷ்ணன் போன்ற இந்து கடவுளர்களை மிக கீழ்தரமாக அவர் பேசியதாக கூறப்படுகிறது. ‘ஆற்றில் உள்ள மணல்களை கூட அள்ளிவிடலாம். கிருஷ்ணனின் மனைவிகளை எண்ண முடியாது. அத்திவரதர் என்ற பெயரில் மூன்று மாதமாக காஞ்சி நெசவாளிகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்’ என்று பேசியுள்ளார்.
Ganesh Babu : 'காரப்பன் சில்க்ஸ்' துணிக்கடை விவகாரத்தில் நாம் கவனிக்கவேண்டிய செய்திகள் இரண்டுதான்:
1. அழிவு வேலை எளிது.
2. ஆக்கும் வேலை கடினம்.
எத்தனையோ ஆண்டுகளாக தங்கள் உழைப்பாலும், பொருளின் தரத்தாலும் சிறந்து விளங்கிய அக்கடையின் வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக சீர்க்குலைக்க ஆர்.எஸ்.எஸ் காவிகளுக்கு வெறும் வாட்சாப் ஃபார்வேடுகளும், முகநூல் ஷேர்களும்தான் தேவைப்பட்டது. அழிவு வேலை எளிது!
ஆனால் திராவிட இயக்க ஆதரவாளர்கள் அந்தக் கடையின் வியாபார வீழ்ச்சியை சரி செய்ய நினைத்தால் அதற்கு ஏராளமானோரின் ஒத்துழைப்பும், களப்பணியும், பணமும், நேரமும் தேவைப்படுகிறது. ஆக்கும் வேலை கடினம்!
இப்போது 'காரப்பன் சில்க்ஸ்' என்ற இடத்தில் 'தமிழ்நாடு' என்று போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே பொருந்தும். கடந்த 50ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் தியாகத்தாலும், உழைப்பாலும் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் வளர்ச்சியையும், சமூகநீதியையும், மத நல்லிணக்கத்தையும் அடித்து நொறுக்குவதற்கு திராவிட இயக்கத்தின் தலைமையான தி.மு.கழகத்தை பலவீனப்படுத்தவேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ் தெளிவாக இருக்கிறது.

அந்த நோக்கத்திற்காக காவிகள் பெரும்பாலும் வதந்திகளையும், அவதூறுகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதுவே தி.மு.கவை வீழ்த்துவதற்கு, திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு, தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்கு எளிமையான வழி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் காவிகளின் தாக்குதலுக்குப் பிறகு 'காரப்பன் சில்க்ஸ்' என்கிற ஒரேயொரு துணிக்கடையை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கே நமக்கு இவ்வளவு உழைப்பும், திட்டமிடலும் தேவைப்படுகிறது என்றால் ஒருவேளை தி.மு.க விசயத்தில் ஆர்.எஸ்.எஸின் திட்டம் வென்றுவிட்டால், அதன் பிறகு தமிழ்நாட்டை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு நமக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை மாத்திரம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
ஆனால் ஒன்று. இப்போது போலவே அப்போதும் திராவிட இயக்கமும், அதன் ஆதரவாளர்களும்தான் மீட்புப் பணிக்காக களத்தில் நிற்போம் என்பது மாத்திரம் நினைவில் இருக்கட்டும்!
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: