ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மாட்டின் வயிற்றுக்குள் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர்

hindutamil.inn : சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பசு மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர் மற்றும் பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.
52-kg-plastic-in-cow-stomachபசு மாடு வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர் சென்னை
பசு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை மூலம் வேப்பேரி தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அகற்றினர். திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான பசு ஒன்று, சமீபத்தில் கன்று ஈன்றது. இந்நிலையில் பசுவுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதோடு தொடர்ந்து கத்தியபடி இருந்தது. இதைத் தொடர்ந்து பசுவை அருகில் இருந்த கால்நடை மருத் துவரிடம் முனிரத்தினம் கொண்டு சென்றார்.

பசுவை பரிசோதித்த அவர், வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்துள் ளார். அதைத் தொடர்ந்து பசுவை மருத்துவக் கல்லூரிக்கு முனிரத் தினம் கொண்டு சென்றார். மருத்துவர்கள் பசுவை ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றுக்குள் கழிவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவக் கல்லூரி இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை யில் மருத்துவ பேராசிரியர் பி.செல்வராஜ், துணைப் பேரா சிரியர்கள் எ.வேலவன், ஆர். சிவ சங்கரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.
இதையடுத்ாது பசுவின் இரைப் பையில் இருந்து 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று முன்தினம் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பசுவின் இரைப்பையில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் தங்கியிருக்கலாம் என்று மருத் துவர்கள் தெரிவித்தனர்.
‘‘தற்போது பசு நல்ல உடல் நலத்துடன் உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர். இந்த அறுவை சிகிச் சையை வேறு எங்கேயாவது செய்திருந்தால் ரூ.35 ஆயிரம் வரை செலவாகி இருக்கும். ஆனால் இங்கு ரூ.70 ரூபாயில் அறுவை சிகிச்சை செய்துள்ளோம்’’ என்று மருத்துவமனை இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித் தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடை பிராணிக ளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொது மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்’’ என்றார்

கருத்துகள் இல்லை: