Muralidharan Pb :
தஞ்சை பூமியில் நிலம் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
நிலம் சம்மந்தமாக திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்ன?
திமுக, குடியானவனர்களுக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செய்த நன்மைகள் என்ன?
எல்லாவற்றுக்கும் பதில், சென்ற ஆண்டு பிராண்ட்லைன் ஆங்கில இதழில் வெளியான ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு தான் கீழுள்ளவை:
இதை எழுதியவர் திரு. ஜெயரஞ்சன் என்கிற பொருளாதார வல்லுநர்.
1967ல் திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்த சட்டங்களின் வழியாக, அதிகாரம் எளிய குத்தகைக்காரரிடமும் தினக்கூலிக்காக உழுபவனும் சென்றது. குறிப்பாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் உயர்வு பெற்றதும் அப்போது தான். கலைஞர் கருணாநிதி தான் தமிழகத்தில் நடந்த சமூக பொருளாதார முன்னேற்றத்தின் காரண கர்த்தர்.
அண்மையில் அனைத்து மாநிலங்களுக்குமே தமிழ்நாடு முன் மாதிரியாகத் தெரிந்தாலும், நிலச் சீர்திருத்தம் தொடர்பான சட்டத்தை தமிழகம் முறையாக பின்பற்றாததற்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டது. நிறைய சட்ட திருத்தும் செய்திருந்தாலும், அதில் உள்ள நுட்பமான ஓட்டைகள் மற்றும் முறையற்று நடைமுறைப்படுத்தல் அதற்கு பாதகமாகவே விளங்கியது. மிகக் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் நிலச்சுவான்தார்களால் அதிகமாக குத்தகைக்கு நிலங்களை கொடுப்பதும் அதிக தொகை பெறப்பட்டதும் நெடு நாட்களாக வழக்கத்தில் இருந்தது. தற்போது அதிகாரம் தலை கீழாக மாறிவிட்டது.
கம்யூனிஸ்டுகள் ஏன் டெல்டாவில் இன்றும் வலுவாக உள்ளனர்?
இன்றியமையாத அந்த மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த பொதுவுடைமை கட்சி, பிற்பாடு திராவிடர் கழகம் கையில் எடுத்து பண்ணையார்களின் நிலைமையை கீழிறக்குவதில் பெரும்பங்கு வகித்தன. திராவிடர் கழகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 1967ல் அரசமைத்த திமுக பின்தங்கிய ஏழை வேளாண் குடி மக்களுக்கு ஒருங்கிணைத்து குடியானவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. திமுக எடுத்த முன்னெடுப்புகளால் எந்த அளவிற்கு சூழலில் மாற்றம் அமைந்தது என்றால் தஞ்சை டெல்டாவில் பார்ப்பனர்களின் வசம் இருந்த நிலங்கள் மெல்ல பிரித்து ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதி பன்னெடுங்காலமாக புழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் டெல்டா. அதனால் வேளாண் குடிக்கும் அப்பகுதிக்கும் உறவு நீண்டநாளையது. இங்கு அடுத்து கவனிக்க வேண்டிய விவரம் யாதெனில் பார்ப்பனர்கள் அதிகமாக இப்பகுதிகளில் நிலக்கிழார்களாக வாழ்ந்துவந்தது பலர் அறியாத செய்தி குறிப்பாக மேல் பகுதிகளில். நிலம் சமமாக இருந்திருக்கவில்லை. பெரிய குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிலம், கோவில், மடங்கள் என்று அனைத்துமே ஒரு சிலர் அனுபவித்துக் கொண்டும், உழுதும், மீதம் உள்ள நிலங்களை ஏழை எளிய மக்களின் உழைப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
பண்ணையாட்கள் முறையில் தான் மேற்கு டெல்டா முழுவதும் நிறைந்திருந்தது. வேலைக்காரர்களுக்கு குத்தகை தவிர, வரம்(பயரில் பங்கு) என்று இன்னோரு முறையில் கூட கூலி கொடுத்து வந்த வழமையும் இருந்துள்ளது. அதில 5-7 % வரை தான் விளைச்சலில் இருந்து கூலியாக கொடுக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக பொதுவுடைமை கட்சி 1943ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்று ஒரு அமைப்பை நிறுவியது. ஆரம்பத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தான் இந்த சங்கத்திற்கு ஆதரவு கொடுத்தனர். அதிகக் கூலி மற்றும் குத்தகை தாரரின் உரிமைகளைப் பறறியே சங்கம் சிந்திததது. பொதுவுடைமைவாதிகளின் போராட்டங்களின் விளைவாக அரசு மாயவரம் ஒப்பந்தம் கையெழுத்தானது. வேளாண் மக்களுக்கும் நிலக்கிழார்களுக்கும் இடையே நிலவிய பிரச்சனைகளுக்கு அரசு நிலச்சுவந்தார்கள் பக்கமே நின்றது.
அப்போதைய காங்கிரஸ் கட்சி நிலம் சம்மந்தமாக போட்ட சட்டங்கள் யாவுமே கிடப்பில் போடப்பட்டது. தீவிரவாதப் போக்குகளை கைவிட்டு, பொதுவுடைமை கட்சி திராவிடர் கழகத்தின் துணையோடு சென்னை மாகாண தேர்தலில் நின்று 5 தொகுதிகளையும் தஞ்சை பாராளுமன்ற தொகுதியையும் கைப்பற்றியது.
திராவிடர் கழுகத்தின் பங்களிப்பு அடுத்த பதிவில் காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக