BBC :திருப்பூர் மாவட்டம் அவிநாசி
ஒன்றியத்தில், தங்கள் குழந்தைகள்
படிக்கும் பள்ளியில் தலித் பெண் சமைக்கக்கூடாது என்று முற்றுகையிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாதி இந்துக்கள் 88 பேரும் தலைமறைவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் சாதி ரீதியான பாரபட்சங்களை சந்தித்ததாக சமையலர் பாப்பாள் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பாள் ஒரு தலித் பெண் என்பதால் சமைக்கக்கூடாது என அந்த ஊரில் சாதி இந்துக்கள் சிலர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இந்த பிரச்சனை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் வரை கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு சமையலர் பாப்பாள் மீண்டும் அவரது பணியை செய்து வருகிறார். பள்ளியில் 75 பேர் கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் இன்று, சனிக்கிழமை, 32 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
இதனால் பணியை செய்தும் மன நிம்மதிக்கு பதில் மன உளைச்சலே இருப்பதாக கூறுகிறார் பாப்பாள். இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறும்போது, "பிரச்சனைக்கு பிறகு என்ன இங்கயே வேல செய்ய சொல்லிட்டாங்க. இரண்டு நாளா இங்க சமைக்கிறேன். ஆனா குழந்தைங்க குறைவாக வந்து சாப்புடுறாங்க. இந்த பள்ளியில் மட்டுமல்ல இந்த பக்கத்துல நிறைய ஊர்ல சாதி பாத்துதான் நடந்துக்குறாங்க. ஒச்சாம்பாளையம் பள்ளியை தவிர்த்து அதற்கு முந்தைய கந்தபாளையம், வைகறைகவுண்டம்பாளையம் போன்ற ஊர்களிலும் சாதி பிரச்சனை காரணமாதா ஸ்கூல் மாறி மாறி போனேன்," என்கிறார்.
'கால அவகாசம் கொடுக்க வேண்டும்'
பள்ளியில் மாணவ மாணவியரின் வருகை பாதியாக குறைந்தது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி பிபிசியிடம் பேசினார். "இன்று சனிக்கிழமை என்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். தற்போது வரை எந்த மாணவர்களின் பெற்றோர்களும் புகாரோ, மாற்று சான்றிதழ் கேட்டோ பள்ளிக்கு வரவில்லை."
"பிரச்சனை இன்னும் சுமூகமாகாததால் பெற்றோர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். எல்லா சமூகத்தினரும் கல்வி கற்கும் பள்ளியாகவும், 100 சதவிகித தேர்ச்சி பெறும் பள்ளியாகவும் உள்ளதால் மாணவர்களின் வருகைக்கு எங்கள் தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொதுவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பிரச்சனையில் மாணவர்களின் நலனுக்காக தேவைப்பட்டால் பெற்றோர்களிடத்தில் நேரடியாகவும் பேசுவோம்," என்றார் சாந்தி.
;'வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவு'

திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவன்குமார் விசாரணைக்கு பிறகு பள்ளியில் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் மீது அவிநாசி சேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். காவல்துறை நடவடிக்கை குறித்து அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பராமசாமி பிபிசி தமிழிடம், "திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி பிரச்சனை தொடர்பாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் முதலில் 13 பேர் மீதும், இரண்டாவதாக 75 பேர் மீதும் அரசு பணியாளரை பணி செய்ய தடுத்தது, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வரை 8மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,"என்று தெரிவித்தார்.
"வழக்குப்பதிவு செய்யப்பட அனைவரும் தலைமறைவாக உள்ளதால் யாரையும் கைது செய்ய முடியவில்லை. காவல்துறை தரப்பில் அனைவரையும் தேடி வருகிறோம். முறையாக அடையாளம் காணப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என மேலும் அவர் கூறினார்.
'பிரச்சனையால் வருகை குறைவு'
பள்ளியின் தற்போதைய நிலை குறித்து தலைமை ஆசிரியை சசிகலா பிபிசி தமிழிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார். "இப்பள்ளியில் 75 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 54 பேரும், 9ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் 30 மாணவ மாணவியரும் உள்ளனர். இதில் 65 மாணவ மாணவியர் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று 20 மாணவர்கள் சாப்பிட வரவில்லை. இந்நிலையில் இன்று 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 15 மாணவ மாணவியரும், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 17 பேர் என மொத்தம் 32 மாணவ மாணவியர் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக