ஞாயிறு, 15 ஜூலை, 2018

அமைச்சர் காமராஜ், ரூ 360 கோடி ஊழல் ... குற்றச்சாட்டை மறுக்கிறார் .. முட்டை கொள்முதல் ...

ஊழல்: அமைச்சர் காமராஜ் மறுப்பு!மின்னம்பலம் :முட்டை கொள்முதலுக்கு ஒளிவு மறைவற்ற முறையிலே டெண்டர் விடப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு, தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ், முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக முட்டை கொள்முதல் செய்யப்படுவதில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக மக்கள் மொட்டை போடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முட்டை கொள்முதல் விவகாரத்திலும் ரூ.5,000 கோடி அளவில் மொட்டை போடப்பட்டிருக்கிறது என்று நேற்று (ஜூலை 14) மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, துவரம்பருப்பு கொள்முதலிலும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ரூ 360 கோடி ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று, திருவாரூரில் (ஜூலை 14) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், “எதிர்க்கட்சிகள் ஊழல் நடைபெறுவதாகக் கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
முட்டை கொள்முதல் உட்பட எந்த டெண்டராக இருந்தாலும், தமிழ்நாடு டெண்டர் ட்ரான்ஸ்பெரன்சி ஆக்ட், அதாவது ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. அதில், முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் காமராஜ்.

கருத்துகள் இல்லை: