சனி, 21 ஜூலை, 2018

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி

ஐகோர்ட், தலைமை நீதிபதி தஹில்ரமணி, சென்னைதினத்தந்தி : புதுடில்லி : மும்பை ஐகோர்ட் மூத்த நீதிபதியாக தஹில் ரமணியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இந்திரா பானர்ஜி பணியாற்றி வருகிறார். அவருக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, மும்பை ஐகோர்ட்டில் 2001 முதல் பணியாற்றி வரும் நீதிபதி வி.கே. தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.மேலும், டில்லி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படும் கீதா மிட்டலை, காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி அனிருத்தா போசை, ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கவுகாத்தி ஐகோர்ட் நீதிபதி ரிஷிகேஸ் ராயை, கேரளா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், குஜராத் ஐகோர்ட் நீதிபதி எம்ஆர் ஷாவை, பாட்னா ஐகோர்ட்டிற்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.
உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி கேஎம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என கொலிஜியம் குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. கடந்த முறை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஜோசப்பை நியமிக்க வேண்டும் என்ற கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: