tamilthehindu : அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய இன்றைய தினத்தில் மாநிலத்தின்
பெருமைகளையும், உரிமைகளையும் மீட்க உறுதியேற்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வராக இருந்த அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று. எழுச்சியூட்டும் இந்த நன்னாளில், நமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை நினைவில் தாங்கி, தமிழகத்தின் உரிமைகளையும் தனிச்சிறப்புமிக்க விழுமியங்களையும் காக்கவும் மீட்கவும் உறுதியேற்போம். செம்மொழிப் பெருமையும் உலகின் மூத்த நாகரிக சிறப்பையும் கொண்ட தமிழ் நிலத்திற்கு, சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது; 1957-ல் சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக நுழைந்தபோதே, இதுகுறித்துப் பேசி பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தது, தமிழகத்தின் அழியாத தியாக வரலாறு. அந்தத் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ் நிலத்திற்கே உரித்தான பெருமைக்கு மகுடம் சூட்டும் முறையிலும், 1967-ல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா அதற்கான நடைமுறைகளை வகுத்தார்.
அதன் காரணமாக, 1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் உணர்ச்சிகரமான ஒருமித்த ஆதரவுடன், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டிய அண்ணா, மூன்று முறை தமிழ்நாடு எனப் பேரவையில் தமது வெண்கலக் குரலில் எழுச்சி முரசம் கொட்ட, சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என முழக்கமிட்டது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சீர்மிகு வரலாறு. தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தை 1967 நவம்பர் 23 ஆம் தேதி மத்திய அரசு ஏற்றதன் விளைவாக, இந்த மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் பெற்று விளங்குகிறது.
அந்தப் பெருமைக்குக் காரணமான அண்ணாவின் அவர்களின் வழியில் ஆட்சியைத் தொடர்ந்து தலைவர் கருணாநிதி, 1996-2001 ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டின் தலைநகருக்கு மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை எனப் பெயர் சூட்டினார். அப்போது நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்த நாட்கள் பெருமையுடன் நினைவில் மலர்ந்து மணக்கின்றன.
மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்றும், தலைநகரத்திற்கு சென்னை என்றும் புகழ்ப்பெயர் சூட்டி, நாகரிக - பண்பாட்டு அடையாளத்தை – தமிழ் நிலத்தின் தன்னிகரற்ற பெருமையை நிலைநாட்டிய பெருமை திமுகவுக்குதப் பெருமையை தமிழர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதுடன், தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டுள்ள அவமானகரமான நிலையில் - மிச்ச சொச்சமுள்ள உரிமைகளையும் மத்திய அரசு பறித்து வருகின்ற ஆபத்தான சூழலில், அந்த உரிமைகளை எப்பாடுபட்டேனும் பாதுகாக்கவும் மீட்கவும் திமுக உறுதியேற்றுச் செயல்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவுள்ள மாநில உரிமைகள் - தேச ஒற்றுமை மாநாட்டில் இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்புடன் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுதும் எதிரொலித்திடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம். உரிமைகளை மீட்டு, அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாட்டின் பெருமைகளைக் காப்போம். தாய்க்குத் தனயன் பெயர் சூட்டிய தனிச் சரித்திரம் அல்லவா அது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக