வியாழன், 19 ஜூலை, 2018

அயனாவரம் .. கைது செய்யப்பட்டாலே குற்றவாளிகள் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்?

கைது செய்ய பட்டாலே குற்றவாளி..அவன் தலையை வெட்டனும்..வக்கில் வைத்து வாதாட கூடாது என்று நம் கைபேசி தட்டச்சில் தீர்ப்பு வாசிக்கும் நாட்டாமைகள்
Ashok Kumar, earlier the prime accused in the Ryan school murder case, spoke to Firstpost about police brutality. Image Courtesy: 101Reporters
Nanda Kumaar : சென்ற வருடம் ஹரியானா மாநிலம் குர்ஹானிம் ரேயான்
இண்டர் நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த குழந்தை அந்த பள்ளி பாத் ரூமில் கழுத்தறுக்க பட்டு கொலை செய்ய பட்ட செய்தி படித்து இருப்போம்.
பஸ் கண்டக்டர் அஷோக் குமார் பாத் ரூமில் சுய இன்பம் செய்த போது அந்த குழந்தை பார்த்து விட்டதாகவும்.. அவனை வன்புணர்வு
செய்ததாகவும் , எல்லோரிடமும் சொல்லி விடுவான் என்று பயந்து கத்தியால் கழுத்து அறுத்து கொல்ல பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் சொல்ல பட்டது..

பத்திரிக்கைகள் முன் அஷோக் ஆஜர் செய்ய பட்டார்.அவரை பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.
Why did you kill the boy?
ஏன் அந்த பையனை கொன்றாய் .
Buddhi kharaab ho gaya tha. Hosh nahi raha. (I was out of my mind. I had lost my senses.)
நான் என் அறிவை இழந்து விட்டேன்..கட்டுபாட்டில் இல்லை.
Why did you kill him?
ஏன் அந்த பையனை கொன்றாய்.

He had seen me masturbating inside the toilet.
நான் டாய்லட்டில் சுய இன்பம் செய்வதை பார்த்து விட்டான்.
Have you sodomised other children before this?
ஏற்கனவே வேறு குழந்தை பாலியல் வல் உறவு செய்தாயா
No. This was the first time.
இல்லை.இது முதல் முறை
Are you guilty?
நீ குற்றம் உணர்வில் இருக்கிறாயா
Yes.
ஆம்..
இது. அஷோக் குமார் பத்திரிக்கையாளருடன் நடந்த பேட்டி .
அஷோக் சிறையில் அடைக்க பட்டார்.கோர்ட்டில் வழக்கு நடந்தது...கொலைக்கு போதுமான சாட்சிகள் இருப்பதாக கோர்ட் ஏற்று கொண்டது..கிட்டதட்ட வழக்கு முடியும் நிலையில் .அவரை ஒரு வக்கில் சந்தித்த போது அவர் தான் போலிஸாரால் அடித்து உதைத்து குற்றத்தை ஒப்பு கொள்ள வைக்க பட்டதாக சொல்ல..அவர் அதை ஹரியான கல்விதுறை அமைச்சர் மோகன் லால் கத்தாரிடம் கொண்டு சென்றார்.
அமைச்சர் சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.. வழக்கில் திருப்பம்..அதே பள்ளியை சேர்ந்த் +1 மாணவனின் இணைய சர்ச் ஹிஸ்ட்ரி கடுமையான விஷங்களை தேடி இருப்பதையும் , கைரேகை நீக்குவதை பற்றி தேடி இருப்பதையும் சி பி ஐ கண்டறிந்தது..
அந்த மாணவன் கண்காணிக்க பட்டு பிடிக்கபட்டு விசாரிக்க பட்ட போது..அவன் அப்பா முன் தான் தான் கொலை செய்ததாக ஒப்பு கொண்டான்..பள்ளி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பையும் , தேர்வையும் ஒத்தி போடுவதற்காக அப்படி செய்ததாக கூறினான்..
கைது செய்ய பட்டு டார்ச்சர் செய்ய பட்ட பஸ் கண்டக்டர் விடுதலை செய்ய பட்டார்...அவர் டிவியில் தந்த பேட்டிகளில் தன்னை போலிஸ் எப்படி டார்ச்சர் செய்து குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டி குற்றத்தை ஒப்பு கொள்ள வைத்தது என்பதை கூறினார்..
ஏ மிஸ்டிரியஸ் டெத் க்ரிமினல் 2 என்று புத்தகமாக கூட இது எழுதப்பட்டது..
கைது செய்ய பட்டாலே குற்றவாளி..அவன் தலையை வெட்டனும்..வக்கில் வைத்து வாதாட கூடாது என்று நம் கைபேசி தட்டச்சில் தீர்ப்பு வாசிக்கும் நாட்டாமைகள் அஷோக் குமாரை வாசிக்கட்டும்...அவர் தந்த பேட்டி கீழே லிங்கில் இருக்கிறது...வாசிக்கவும். ரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைக்ளை அனுபவித்த அந்த ஏழைக்கு இந்த சமுக அறச்சீற்றம் என்னவாக இருக்கும்..

கருத்துகள் இல்லை: