திங்கள், 16 ஜூலை, 2018

டாக்டர் ராமதாஸ்! .... தலித் பள்ளியில் படித்த ஒரு ஏழை சிறுவன்


Palai Karthik : பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், தொடக்க கல்வியை அவரது
ஊரில் ஆதிதிராவிடர் காலனியில் ஆசிரியர் பாலசுந்தரம் மற்றும் அவரது மனைவி கமலா அவர்களும் சேர்ந்து நடத்திய ‘காந்திஜி ஆதாரப் பள்ளி’ல் படித்திருக்கிறார்.
அவருக்கு பத்து வயது இருக்கும் போது உறவினர் வீட்டில் தங்கி படிக்க காஞ்சிபுரம், எலப்பாக்கத்துக்கு அவருடைய குடும்பத்தார் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இன்னும் கஷ்டம். தினமும் சாணி பொறுக்க வேண்டும். இரண்டு மைல் நடந்து சென்று, சாணி பொறுக்கி கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்தால் உடலெல்லாம் வழியும்; கால் கசந்து போகும். வந்து குளித்துவிட்டு பள்ளிக்கூடம் ஓட வேண்டும். ஆறாம் வகுப்புக்கு மேல் சென்னையிலுள்ள அவருடைய அக்கா வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதன் பின், சென்னை ராயபுரம், மீனாட்சியம்மன்பேட்டையில் பாலசுந்தரம் ஆசிரியர் அவர்களின் சினேகிதர் பெரியசாமி நடத்திய ‘கண்ணப்பநாயனார் பள்ளி’யில் சேர பாலசுந்தரம் கடிதம் கொடுத்திருக்கிறார். இவ்வாறு தொடக்கக் கல்வி தாண்டி வெளியூர் போய் படிக்கவும் பள்ளிக்கூடம் காட்டி வழிநடத்தியிருக்கிறார்கள்.
ராமதாஸ் அவர்களின் மாமா துறைமுகக் கூலி. ‘சாப்பாடு மட்டும்தான் போடுவோம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் அங்கே போதிய வசதியில்லாததால் எம்.சி.ராஜா அரசினர் விடுதியில் தங்கி படித்திருக்கிறார்.
- இந்து தமிழ்'க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து....

வரலாறு இப்படியிருக்க தான் வளர்ந்த கதையை மறந்து விட்டு தன் சமூக சாதிவெறியர்களை திருப்திப்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய கடந்த வருடங்களில் எல்லா சாதிவெறி சங்கங்களையும் சேர்த்து கொண்டு தலித் அல்லாதோர் கம்பேனி அமைத்து ஊர் ஊராக கூட்டம் போட்டு சாதிய விஷத்தை கக்கியதையும் நம்மால் மறக்க முடியாது.
பிற்சேர்க்கை : அவர் சொல்லா விட்டாலும் ராமதாஸின் அம்மாவின் ஊர் தெருவை வைத்து பிறர் இதற்குள் நிருபித்து இருப்பார்களே!

புதியதமிழகம் கிருஷ்ணசாமியின் வழக்கில் வட்டாட்சியர் அவரது தாயார் சக்கிலியர் என்றும் தந்தை கொண்டா ரெட்டி என்றும் அவரை வளர்த்த கருப்பசாமி தான் பள்ளர் என்றும் நீதிமன்றத்தில் அவரை பற்றி சமர்பித்ததாக செய்தி வரவில்லையா? இது போல ராமதாஸ் விசயத்தில் எதுவும் நடக்கவில்லையே! வெறும் வாய் வழி தகவல் தானே ஆதாரமில்லையே...

கருத்துகள் இல்லை: