திங்கள், 10 டிசம்பர், 2018

வைர வியாபாரி கொலை: 'டிவி' நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி, கைது

 வைர வியாபாரி, கொலை, 'டிவி' நடிகை, கைதுதினமலர்: மும்பை: மும்பையை சேர்ந்த வைர வியாபாரி கொலை வழக்கில், மாநில அமைச்சரின் முன்னாள் உதவியாளர், 'சஸ்பெண்ட்' ஆன போலீஸ்காரர் மற்றும் பிரபல தொலைக் காட்சி நடிகை ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். விசாரணை. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள காட்கோபர் பகுதியை சேர்ந்த வர் வைர வியாபாரி, ராஜேஷ்வர் உதானி. இவர், சமீபத்தில், வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின், இவர் வீடு திரும்பவில்லை.ராஜேஷ்வர் உதானி, சம்பவத்தன்று, தன் காரில் சென்று, ஒரு இடத்தில் இறங்கி, அங்கு நின்றிருந்த வேறொரு காரில் ஏறிச் சென்றதாக, அவரது கார் டிரைவர், போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, 'ராஜேஷ்வர், கடத்தப்பட்டு இருக்கலாம்' என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில், ராஜேஷ்வரின் உடல், கைப்பற்றப்பட்டது.இதையடுத்து, ராஜேஷ்வரின், 'மொபைல் போன்' அழைப்புகளை, போலீசார், சல்லடையாக அலசினர். அதில், மும்பையில் உள்ள பல உயர்தர மதுபான விடுதிகளுக்கு, ராஜேஷ்வர் அடிக்கடி சென்று வருவதும், அவருக்கு, பல தொலைக்காட்சி நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில், மஹாராஷ்டிராவின், வீட்டுவசதி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் மேத்தாவிடம், உதவியாளராக பணியாற்றிய சச்சின் பவார் என்பவனை, போலீசார் கைது செய்தனர்.
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி, 'சஸ்பெண்ட்' ஆன, தினேஷ் பவார் என்ற போலீஸ் கான்ஸ்டபிளை, கைது செய்தனர்.இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையும், மாடலுமான, தேவோலீனா பட்டாசார்ஜி, 28, என்பவளையும், போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபலங்கள்

மூவரிடமும், ராஜேஷ்வர் கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.இந்த கொலை வழக்கில், மேலும், பல சின்னத் திரை பிரபலங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அவை விரைவில் வெளியே வரும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.ce. This includes

கருத்துகள் இல்லை: