வியாழன், 13 டிசம்பர், 2018

114 அடி உயர திமுக கொடி.. இந்தியாவிலேயே மிக உயரமான கொடி கம்பத்தில் ... அண்ணா அறிவாலயத்தில்

Samayam Tami :  நாட்டிலேயே மிக உயரமாக, 114 அடி உயரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கழக இருவண்ணக் கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னள் முதலமைச்சருமான மு. கருணாநிதி, கடந்த ஆகஸ்டு 7ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறந்து வைக்கப்பட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி நடக்கயிருக்கிறது. இகுறித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆணவத்தை வீழ்த்தி அசைகிறது நம் வெற்றிக்கொடி!.
விரைவில் வெற்றிக்கொடி இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் பறக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 மேலும், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது. பாசிசத்திற்கு எதிராக நடந்த போரின் இது தான் தொடக்க வெற்றி.

இதே போன்று தமிழகத்திலும், பாஜகவும் அதன் தயவில் இருக்கும் அதிமுக அரசும் நிச்சயமாக வீழ்த்தப்படும். தொடர்ந்து தேர்தல் களத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் வெற்றிக் கொடியாக திமுகவின் வெற்றிக் கொடி பறக்கும். அதற்கு முன்னோட்டமாக தற்போது கழகத்தின் தலைமையகத்தின் வாயிலில் நாட்டிலேயே மிக உயர்ந்து நிற்கும் வகையில், 114 அடி உயரமும் 2430 கிலோ எடையும் கொண்ட கொடிக்கம்பத்தில் இருபதுக்கு முப்பது அடி என்ற பிரம்மாண்ட அளவிலான கழகக் கொடியினை டிசம்பர் 12ஆம் நாள் உங்களில் ஒருவனான நான் ஏற்றி வைத்தேன்.

கருத்துகள் இல்லை: