வினவு செய்திப் பிரிவு: இரண்டு
ஆயிரம்
ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பனிய சாதித் திமிர் பிடித்த வெளிவந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காவி வெறியர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது. மாட்டு மூளையை வைத்துக்கு கொண்டு தங்களது தோல்விக்கு என்ன காரணம் என ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மாட்டு மூளை பகுத்தறிவுள்ள மனிதர்களைப் போலவா சிந்திக்கும்? இதோ பார்ப்பனிய ஆதிக்கப் பேச்சுக்குப் பெயர் போன உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘உயர்சாதியினரை பகைத்துக்கொண்டால் பாஜக வெல்ல முடியாது’ என தெரிவித்துள்ளார்.
“சவர்னா சாதிகளின் (உயர்சாதிகள்) உணர்வுகளைப் புண்படுத்தினால், பாஜக தேர்தலில் வெற்றி பெற முடியாது. எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் முடிவு பாஜக- வை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறது” என ஐந்து மாநில தேர்தலில் பாஜக-வின் தோல்வி குறித்து கருத்து சொல்லியிருக்கிறார் சுரேந்திர சிங்.
பொதுமக்கள், தற்காலிக பாடத்தை பாஜகவுக்கு புகட்டியிருப்பதாக சொல்லும் சிங், “எஸ்.சி.எஸ்.டி சட்டத்தில் மீண்டும் மாற்றம் கொண்டு வரவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் 2019-ல் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வியே மிஞ்சும்” என்கிறார். உயர்சாதியினர்தான் பாஜக-வின் பாரம்பரிய வாக்கு வங்கி என அழுத்தமாகச் சொல்கிறார்.
பார்ப்பன திமிர் தெறிக்க பேசும் சிங், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து கடந்த காலங்களில் மோசமாக பேசியவர். தனித் தொகுதிகளில், தலித் அல்லாதவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என சொன்னவர் இவர். வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்தவர். சாதி வன்மத்தை கக்குவதோடு இவர் நிற்கவில்லை, பெண்களுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருபவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை ‘எருமை மாடு’ என அழைத்ததோடு, அவருக்கு எந்தவித ‘ஆச்சாரத்தையும்’ கற்றுத்தர முடியாது என பார்ப்பன கொழுப்பு தொனிக்க பேசினார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை, ‘இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டுகொள்ளாமல் இருக்கும் சூர்ப்பனகை’ என்றார்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏவை காப்பாற்றக் கிளம்பிய இந்த பார்ப்பன கொழுப்பு, “மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணை எவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது” என்றது.
கடந்த ஜூலை மாதம், முசுலீம்களை எண்ணிக்கை அதிகரிக்கிறது; இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கவலைப்பட்டவர், ‘குறைந்தபட்சம் ஐந்து குழந்தைகளையாவது இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என உளறினார்.
:
இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பனிய சாதித் திமிர் பிடித்த இந்த காவிவெறி ஸோம்பிகளால் பாஜக, ‘வெற்றிகரமான தோல்வியை’ கண்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்டவர்கள்தான் பாஜக-வில் எம்.எல்.ஏக்களாக, எம்பிக்களாக, அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றால் இதை விட இந்தியாவிற்கு என்ன அபாயம் நேர்ந்து விடும்?

கேலிச்சித்திரம் : ஓவியர் முகிலன். |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக