மின்னம்பலம் :
அதிமுக - அமமுக இணையும் என்பதற்கான மேலும் சில அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம் தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், “அதிமுக - அமமுக விரைவில் இணையும். இணைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘இமயமலை - காளான்’ என்று உவமை சொன்னாலும், நடப்பதே வேறு என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
டிசம்பர் முதல் வாரத்தில் தினகரன் டெல்லி சென்றபோது அவரை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து அதிமுக - அமமுக இணைப்பு பற்றிப் பேசியதாக தகவல் வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷா மகன் ஜெய் ஷா, தினகரனைச் சந்தித்து பேசியுள்ளார் என்றும் தகவல்கள் படபடக்கின்றன. 60 நிமிடத்துக்கும் மேல் நடந்த அந்தச் சந்திப்பில், “அமமுக -அதிமுக இணையுங்கள். கட்சி உங்களிடம் இருக்கட்டும். ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கட்டும். மந்திரி சபையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நீங்கள் பிரிந்திருப்பதால் திமுகவுக்குத்தான் பலம் கூடும்” என்று அமித் ஷாவின் தகவலை அவரது மகன் டிடிவியிடம் தெரிவித்துள்ளாராம்.
இணைப்புக்கான முன்னோட்டமாக்கத்தான் தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு வருமானம் வரும் வகையில் இரண்டு குவாரிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.
விரைவில் அதிமுக - அமமுக இணையும் என்பதுதான் சென்னை முதல் டெல்லி வரை உலவும் செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக