திங்கள், 10 டிசம்பர், 2018

2.O மொத்த வசூல் இவ்வளவு தானா? முதல் வார மொத்த வசூல்..

2.O மொத்த வசூல் இவ்வளவு தானா?மின்னம்பலம் : - இராமானுஜம்
2.O நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி மொத்த வசூல். ஏழு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயும், எஞ்சிய மூன்று நாட்களின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயும் என்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதால் உண்மையான வசூல் குறித்து நடத்தி விசாரிப்பில் கிடைத்த தகவல்களைப் பார்ப்போம்.
நாம் ஏற்கனவே கூறியபடி தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் மட்டுமே உறுதியானது. தியேட்டரில் படங்களைத் திரையிட வடஇந்தியா, தெலுங்கு மாநிலம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் FMS மூலம் லைகா விநியோகஸ்தர்களிடம் மினிமம் கேரண்டி, கூடுதல் அட்வான்ஸ் அடிப்படையில் ரூபாய் 370 கோடி வாங்கியுள்ளது.

முதல் வாரம் தியேட்டர் மொத்த வசூல்
தமிழ்நாடு - 60 கோடி
இந்தி மொழி - 132 கோடி
கேரள மாநிலம் - 10 கோடி
தெலுங்கு பதிப்பு - 61.5 கோடி
கர்நாடகா மாநிலம் - 26. 25 கோடி
வெளிநாடு (FMS) - 96 கோடி
மொத்த வசூல் - 385.75 கோடி.
இது தோராயமான கணக்கு. இந்தி பதிப்பின் வசூல் கணக்கு வெளிப்படைத் தன்மையுள்ளது. பிற வசூல் கணக்குகளில் குறைந்த பட்சம் 10% வேறுபாடு இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஏனென்றால் உண்மையான வசூலைக் கூறுவதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. அதனால் தோராயமாக, உண்மைக்கு நெருக்கமாகவே வசூல் தகவல்களை வெளியிட முடியும்.
இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2.O நகர்புறங்களில் உள்ள 3D தியேட் டர்களில் கல்லா கட்டுகிறது. பிற தியேட்டர்களில் மந்தமான வசூலை எதிர்கொண்டுள்ளது. 2.O படம் முதல்கட்ட வெளியீட்டில் வணிக ரீதியாக, வசூல் அடிப்படையில் படத் தயாரிப்புக்குச் செலவழித்த சுமார் 450 கோடியை எடுக்க முடியவில்லை. அதே வேளையில் 2.O படத்தின் இரண்டாம்கட்ட வெளியீட்டில் அசலை வசூல் மூலம் மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
அது எப்படி? இரண்டாவது வார முடிவில் 2.Oவின் மொத்த வசூல், அதன் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைக்கப்போகும் வருவாய் எவ்வளவு?
நாளை மாலை 7 மணி பதிப்பில்.

கருத்துகள் இல்லை: