வியாழன், 13 டிசம்பர், 2018

சுந்தர் பிச்சையை வறுத்து எடுத்த அமெரிக்க காங்கரஸ் விடியோ ....கூகுளில் முட்டாள் என ட்ரம்ப் ...


NDTV : "முட்டாள் என்ற வார்த்தையோடு ட்ரம்ப் புகைப்படம் ஒத்து போயிருக்கலாம்" என்ற சுந்தர் பிச்சை தெரிவித்தார்
அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒருவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் எழுப்பிய கேள்வி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் தேடல் எப்படி நடக்கிற‌து என்பது பற்றி விளக்கும் போது '' கூகுளில் முட்டாள் என தேடினால் அதிகமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகைப்படம் வருவது ஏன்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை '' எதையும் கூகுள் உள்நோக்கத்துடன் செய்வதில்லை. அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், அதிகமான பதிவுகளில் உள்ள வார்த்தைகள் என தேடி அல்காரிதம் செட் செய்யப்பட்டிருக்கும். அதிலிருந்து சிறந்த தேர்வை கூகுள் தேர்வு செய்யும். ஒருவேளை அந்த வார்த்தையோடு ட்ரம்ப் புகைப்படம் ஒத்து போயிருக்கலாம்" என்ற அர்த்தத்தில் தெரிவித்தார்.

"கூகுள் சிஇஓ நீதிமன்ற குழுவுக்கு முன்னர் எப்படி கூகுள் தேடுகிறது என்று விளக்கும்போது, 200 விஷயங்களை கருத்தில் கொண்டு தேடும் என்பதையும், முடிவுகளையும் காட்டி விளக்கினார். அதில் தொடர்புடையவை, பிரபலமாக இருப்பவை என்று வரிசைப்படுத்தப்பட்டு தேடப்படும்" என்றார்.
குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூகுளின் அல்காரிதம் சித்தரிக்கப்படுவது என்று விமர்சித்துள்ளதற்கு, ஸோக்ரென் ''எப்படி இணையம் வேலை செய்கிறது, அதில் தேடல்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள‌ வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.ஆனால் குடியரசு கட்சியினர் கூகுளின் பதிலை ஏற்றுக்கொள்ளவில்லை.


மேலும் ஜிஓபி வரி குறித்து தேடினால் முதல் பக்கத்தில் எதிர்மறையாக கட்டுரைகளே வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.கூகுளின் அரசியல் நோக்கம் தவறுதலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: