விகடன் :மத்திய அரசுடனான மோதல் போக்கின் எதிரொலியாக, ரிசர்வ் வங்கி ஆளுநர்
உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக, அரசியல் கட்சித்தலைர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்,
உர்ஜித். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1986-ம் ஆண்டு எம்.ஃபிலும்,
1984-ம் ஆண்டு, லண்டன் பல்கலைக்கழத்தில் பொருளாதாரமும் படித்தவர். கடந்த
1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு
ஆலோசகராக இருந்தார். ரிலையன்ஸ் குழுமத்தில் பணிபுரிந்தவர். கடந்த 2013-ம்
ஆண்டு ஜனவரி 11-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்தார்
. ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராகக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டர்பர்
மாதம் பொறுப்பேற்றுக்கொண்டவர் உர்ஜித் படேல். அவர் பொறுப்பேற்ற சில
நாள்களிலே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மோடி
தலைமையிலான அரசு, ஆர்.பி.ஐ-யிடம் 3 லட்சம் கோடிரூபாயை மத்திய நிதி
அமைச்சகத்துக்கு வழங்க வலியுறுத்தியது. இதற்கு ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித்
எதிர்ப்பு தெரிவித்துவந்ததால், மோதல் வெடித்தது.
இந்த மோதலின் எதிரொலியாக உர்ஜித் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து
பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் .ராகுல்காந்தி அளித்த பேட்டியில்
``பா.ஜ.க அரசில் ரிசர்வ் வங்கி ஆளுநர், நீண்ட நாள்களுக்கு நீடிக்க
மாட்டார் என ஏற்கெனவே கூறியிருந்தோம்'' என்றார். டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,` `ஆர்.பி.ஐ- யிலிருந்து மோடி அரசு
கொள்ளையடிக்கக் கோரிய 3 லட்சம் கோடி ரூபாயைத் தரமறுத்ததால், ஆளுநர்
பொறுப்பிலிருந்து உர்ஜித் வெளியேற்றபட்டுள்ளார். தங்கள் திருட்டுக்கு
வளைந்துகொடுக்கும் ஒருவரை மோடி அரசு புதிய கவர்னராகப் பதவி கொடுத்து அழகு
பார்க்கும்'' என்றார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ``இதற்கு
முன் இப்படி நடந்ததில்லை. இந்த நிகழ்வு கவலையளிக்கிறது. பொதுமக்களின் பணம்
ஆர்.பி.ஐ-யின் கட்டுபாட்டில் உள்ளது. அனைத்து நிறுவனங்கள் மீதான மக்களின்
நம்பிக்கை சுக்குநூறாகியுள்ளது. இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி நிலை''
என்றார்
இதுதொடர்பாக, அரசியல் கட்சித்தலைர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக