Savithri Kannan :
ரொம்ப
நாளுக்கு முன்பு படித்த நேர்காணல் ஒன்றில் இளையராஜா இவ்வாறு பேசியது
பேரதிர்ச்சியை எனக்கு உருவாக்கியது! ‘’மதுரையிலிருந்து வரும் வழியெல்லாம்
பல ஊர்களின் இசை சி டி விற்பனை கடைகளின் போர்டுகளில் என்படம் வரையப்பட்டு
இருந்தது,சரி ஏதோ என்னை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...என்று
நினைத்துக் கொண்டேன்...!’’
இசைத்துறையில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தையும்,புகழையும் முழுக்க,முழுக்க காசு,பணம் சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது..! உண்மையில் அந்த கடைக்காரர்கள் விற்பனை செய்து பெறும் பணத்தின் ஒரு பகுதி அவரது பிழைப்புக்கும் வந்து சேருகிறது என்பதை ஏனோ அவரால் உணரமுடியவில்லை..!
இளையராஜாவின் ராயல்டி பிரச்சினையை பார்ப்போம். ஒரு இசைப்பாடல் உருவாக்கம் என்பது ஒரு டீம் வொர்க்! அதில் தயாரிப்பாளர்,பாடல் ஆசிரியர்,பாடகர்,இசைக் குழுவிலுள்ள கலைஞர்கள் சம்பந்தப்படுகிறார்கள்! ஆகப் பாடலுக்கான உரிமையை தனக்கு மட்டுமே என இளையராஜா கோரமுடியாது. முதலாவதாக என் பாடல் என அவர் கூறுவதே ஆணவமாகும்!
இசை என்பது எந்த ஒரு தனி மனிதனுக்குமானதுமல்ல,இளையராஜாவின் இசை பலகாலமாக,பல தலைமுறைகளாக நாட்டுப்புற மக்கள் தங்கள் பாடுக்காக பாடி வந்ததே! அவர்களிடமிருந்து உள் வாங்கித் தான் அவர் வெளிப்படுத்தினார்.மேலும் எத்தனை எத்தனையோ இசை மேதைகளிடமிருந்தும் அவர் எடுத்துள்ளார்.அதில் கர்நாடக சாஸ்த்திர மும்மூர்த்திகளான தியாகராஜர்,சியாமா சாஸ்த்திரிகள்,முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோருக்கும் பங்குள்ளது.தமிழ் இசை மூம்மூர்த்திகளான முத்து தாண்டவர்,அருணாச்சல கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோருக்கும் நிச்சயம் பங்குள்ளது.
.இது மட்டுமல்ல,அவரது முன்னோடிகளான சி ஆர் சுப்பராமன்,ஜீ ராம நாதன்,எம் எஸ் விஸ்வ நாதன்,ஆர் டி பர்மன்..என எண்ணற்ரவர்களுக்கும் தொடர்பிருக்கிறது. இளையராஜாவின் ஒவ்வொரு பாடலின் மூலத்தையும் ஆராய்ச்சி செய்யப் போனால்..அதில் பால முரளிகிருஷ்ணா, விணை மேதை எஸ் பாலச்சந்தர்,எம் எஸ் தண்டபாணி தேசிகர்..உள்ளிட்ட மேதைகளிடமிருந்தெல்லாம் அவர் எவ்வளவு எடுத்துள்ளார் என்பதை இசை ஆர்வலர்களால் புட்டுப்புட்டு வைக்க முடியும்! சாவித்திரி கண்ணனைப் போன்ற எளிய மனிதனுக்கு பெரிய இசைஞானம் இல்லை தான்!.ஆனால்,கேள்வி ஞானம் உண்டு!
இளையாராஜவுக்கு தகுதிக்கும்,தேவைக்கும் அதிகமாகவே பணமும்,புகழும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ஆன்மீகத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அவரிடம் தான் அளவில்லாதவகையில் பேராசை வெளிப்பட்டவண்ணமுள்ளது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக