tamil.oneindia.com - hemavandhana.:
சென்னை: ஆலப்பாக்கம் வீட்டுக்குள் நுழைந்த நடிகை வனிதாவை போலீசார் வெளியேற்றினார்கள்.
ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் போன செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று சொல்லி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். ஷூட்டிங்கும் எடுத்து முடிந்துவிட்டது. ஆனால் வீட்டை அவர் காலி செய்யவில்லை.
இதனால்
நடிகர் விஜயகுமார், வனிதாவை வெளியேற்றி தனது வீட்டை தன்னிடமே ஒப்படைக்க
வேண்டும் என்று மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும்
புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், ஆலப்பாக்கம் வீட்டில் இருந்த
வனிதாவையும், அவரது நண்பர்களையும் வெளியேற்றினர். அப்போது இது சம்பந்தமாக
செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை வனிதா தரக்குறைவாக பேசினார்.
மேலும்
வனிதாவின் நண்பர்கள் அப்போது வீட்டை விட்டு வெளியேற மறுத்து தகராறில்
ஈடுபட்டனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து வனிதா, தனதுஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சுப்ரீம்
கோர்ட்டுக்கே போய்விட்டார். தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு
சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
மனுவை
விசாரித்த கோர்ட்டும் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று
உத்தரவிட்டது. இந்த உத்தரவினை அடுத்து, நேற்று முன்தினம் காலை வனிதா,
ஆலப்பாக்கம் வீட்டுக்கு வந்தார். ஆனால் பங்களாவில்
பூட்டுபோடப்பட்டிருந்தது. எனினும் அதை உடைத்து கொண்டு, தனது மகளையும்
கூட்டிக் கொண்டு உள்ளே போனார்.
இந்த
விஷயம் மதுரவாயல் போலீசுக்கு தெரிந்துவிட்டது. கோர்ட்டில் கேஸ்
நடக்கும்போது இப்படித்தான் அத்துமீறி வீட்டுக்குள் வருவதா? என கேட்டனர்.
அதற்கு வனிதா, தன்னிடம் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸே இருப்பதாக சொல்லி, அதனை
எடுத்து காட்டினார். உடனே போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
இந்த
நிலையில் அப்பா விஜயகுமார் சார்பில் திரும்பவும் மதுரவாயல் போலீசில் ஒரு
புகார் தரப்பட்டது. அதில், ஆலப்பாக்கம் வீட்டின் சிசிடிவி காமரா, வீட்டில்
உள்ள பொருட்கள் எல்லாம் சேதமடைந்திருக்கிறது என்று கூறினார்கள்.
இதனால்
திரும்பவும் போலீசார் வனிதாவிடம் வந்து, "போலீஸ் பாதுகாப்புதான் தர
வேண்டும் என்று கோர்ட் சொல்லியிருக்கே தவிர, இப்படி வீட்டுக்குள் நுழைய
அனுதி தரவில்லை" என்றனர். இதையடுத்து வனிதா போலீசாரிடம் சண்டைக்கு
போய்விட்டார். ஆனாலும் போலீசார், வனிதா காண்பித்த சுப்ரீம் கோர்ட் நோட்டீஸை
திரும்பவும் அவரிடமே சுட்டிக்காட்டி விளக்கினர்.
அதோடு அவரை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றி கதவையும் பூட்டி, ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். ஆலப்பாக்கம் வீட்டிலும் நிறைய போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து வனிதா, நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் அளித்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
குடும்ப
பிரச்சனை சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் உள்ளது. அதனால் போலீசார் இதில்
தலையிடக்கூடாது இவர்களின் செயலால் நான் ரொம்ப பயந்துபோய் இருக்கிறேன். எனவே
இதை பற்றி புகார் சொல்ல முதலமைச்சரை சந்திக்க அவரது வீட்டிற்கு போக
முயற்சி செய்தேன். அதன்பின்னர், அவரது உதவியாளரை சந்தித்து என் நிலைமையை
சொன்னேன்.
தற்போது
முதலமைச்சரின் உத்தரவின்பேரில் சென்னை மாநகர கமிஷனிரை சந்தித்து எனது
புகார் மனுவை அளித்துள்ளேன். போலீசார் எனக்கு எந்ததொந்தரவும் இனி
அளிக்ககூடாது என கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு கமிஷனரும், போலீசார்
இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் என நம்பிக்கை தந்திருக்கிறார்"
என்றார்.
ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் போன செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று சொல்லி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். ஷூட்டிங்கும் எடுத்து முடிந்துவிட்டது. ஆனால் வீட்டை அவர் காலி செய்யவில்லை.
நண்பர்கள்
சுப்ரீம் கோர்ட்
ஆலப்பாக்கம் வீடு
அத்துமீறுவதா?
சிசிடிவி காமிரா
அனுமதி இல்லை
அதோடு அவரை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றி கதவையும் பூட்டி, ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். ஆலப்பாக்கம் வீட்டிலும் நிறைய போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து வனிதா, நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் அளித்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக