திங்கள், 3 டிசம்பர், 2018

ராஜபக்சே பிரதமராக எந்த முடிவும் எடுக்க முடியாது" இலங்கை நீதிமன்றம்

இலங்கை அரசியல் சிக்கல் ஓய்ந்தது: பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே!"NDTV" : அக்டோபர் 26ம் தேதி, ரணில் விக்ரமசிங்கே தலைமையில் பாராளுமன்றம் இயங்கும்
இன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.

Colombo: இலங்கையில் அரசியல் சூழல் சில நாட்களாகவே சரியில்லாத நிலையில் இருந்தது. அதிபர் மைத்ரிபாலா, சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தது தான் இந்த அரசியல் சூழலில் ஏற்பட்ட அமைதியற்ற தன்மைக்கு காரணமாக அமைந்தது.
இன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அவரது கூட்டணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவின் கட்சி உறுப்பினர்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வெளியேறினர்.
ரணில் மற்றும் ராஜபக்சே இருவருமே பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். ஆனால், ரணில் விக்ரமசிங்கே 225 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தனது கூட்டணியை, பதவியிலிருந்து விலக்குவது சட்ட ரீதியாக செல்லாது என்ற புகாரை முன்வைத்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூர்யா இந்தக் கூட்டத்தை ஆரம்பித்ததும் அனைத்து கட்சி தலைவர்களிடம் யூபிஎஃப்ஏ மற்றும் யூஎன்எஃப் கட்சியிலிருந்து ஐந்து பேரை, 12 பேர் கொண்ட குழுவில் இணைத்தார்.

இதற்கு மூத்த யூபிஎஃப்ஏ உறுப்பினர் தினேஷ் ''சபாநாயகர் இந்தக் குழுவை நியமித்ததில் ஒருதலைபட்சமாக செயல்பட்டார்" என்று குற்றம் சாட்டினார்.
சபாநாயகரின் இந்த முடிவு குறித்து கூறிய கிரியெல்லா "இந்தக் குழுவை சபாநாயகர் இரண்டே வழிமுறையின் கீழ் தான் தேர்ந்தெடுத்ததுள்ளார். ஒன்று அரசு அல்லாதவர்கள் மற்றொன்று அரசால் ஆதாயம் அடையாதவர்கள்" என்று கூறினார்.
சிறிசேனா ஆதரவாளரான வீரவன்சா " சபாநாயகர்,  அரசை மதிக்கவில்லை என்றால் நாங்கள் சபாநாயகரை சபாநாயகராகவே மதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சபாநாயகர் முறையான வாக்கெடுப்பை நடத்தினார். அதில் 121 வாக்குகளும், யூ என் எஃப் , முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டணிகளின் ஆதரவோடு ரணில் வெற்றி பெற்றார்.

COMMENT

கருத்துகள் இல்லை: