tamil.indianexpress.com :
புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று மாலை சிகிச்சை
பலனின்றி காலமானார்.
இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா.ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சேவையை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதியுதவி அளித்து வந்தனர்.
சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில், ஜெயராமனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு பலருக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக