Fan of music இசையின் ரசிகன்;
இளையராஜா பற்றி எழுதும் போது நிச்சயமாக தன்ராஜ் மாஸ்டரைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மைசூர் மகாராஜாவின் இசைக்குழுவில் வாசித்து வந்தவர்தான் இந்த தன்ராஜ். இந்த இசைக்குழுவை வழிநடத்தியவர் ஒரு ஜெர்மானியர். அவர் தொடர்பினால் மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் ஞானம் பெற்றார் தன்ராஜ். இரண்டாம் உலகப்போர் வெடித்த போது இந்தியாவில் இருந்து வெளியேறினார் அந்த ஜெர்மானியர். (பெயர் தெரியவில்லை – யாருக்காவது தெரிந்தால் தெரியப்படுத்தவும்)
சில ஆண்டுகள் வேலையில்லாமல் தவித்த தன்ராஜுக்கு ஜெமினி வாசன் ஆதரவளித்திருக்கிறார். சந்திரலேகாவின் இசையமைப்பிலும் இவருக்கு பங்கு இருந்திருக்கிறது. ஆனால் டைட்டிலில் இவர் பெயர் இடம்பெறவில்லை. ஜெமினி வாசன் எழுதிய ஒரு தொகுப்பில் இதை வெளியிட்டிருக்கிறார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் லஸ் கார்னரில் உள்ளது அந்த சாய் லாட்ஜ். அறை எண் 13-ல் இருந்து வாத்திய இசை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும். கிடார் இசையும், டிரம்சுகளின் ஒலியும், பியானோவின் மெல்லிசையும் வந்தபடி இருக்கும்.
அன்றைய காலகட்டத்தில், திரை இசை வாத்தியக் கலைஞர்கள் பலர் சாய் லாட்ஜின் படிக்கட்டுகளை ஏறியவர்கள்தான். அந்தப் படிக்கட்டுகள்தான் அவர்களது இசை அறிவின் ஆரோகணமாக விளங்கியது. அதற்கு உத்தரவாதம் தந்தவர் அந்த அறையின் நடுநாயகமாக விளங்கிய தன்ராஜ் மாஸ்டர்.
இளையராஜா – முதல் படத்திலேயே தனித்துவம் மிக்க இசைச் சேர்ப்புகளை செய்தவர் என்ற பெருமை அடைவதற்கும், வாத்தியங்களை “அரேஞ்ச்” செய்வதில் வல்லவர் என்று பெயர் பெறுவதற்கும், எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்த இசையமைப்பாளர் என்று பெயர் பெறுவதற்கும் இந்த தன்ராஜ் மாஸ்டரும் ஒரு முக்கிய காரணம்.
எம்.எஸ்.வி. பாடல்களின் மெட்டுக்களில் அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியின்
பிரசாரப் பாடல்களை பாட, அவருக்கு பின்னணி ஆர்மோனியம் வாசித்தும், கிராமியப்பாடல்களை வாய்விட்டுப் பாடி மகிழ்ந்தும் தன்னுடைய இசை ரசனைகளை வளர்த்துக் கொண்டிருந்த இளையராஜாவிற்கு ஒரு மேற்கத்திய இசை பரிமாணத்தை தன்ராஜ் மாஸ்டர் அளித்துக் கொண்டிருந்தார்.
இதனால் சாய் லாட்ஜ் அறை எண் 13-க்கு பீதோவனும், மோசார்டும், பாஹ்கும், மேண்டல்சனும், பிராம்சும், சைக்காவ்ஸ்கியும் அடிக்கடி வந்து போனார்கள்.
இளையராஜா எழுதிய “சங்கீதக் கனவுகள்” புத்தகத்தில் இதைப் பற்றி எழுதியிருப்பது…
“வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார். வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் அவர் பணமே வாங்கலே. பியானோ கற்றுக்கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன். இசையின் அடிப்படை நுணுக்கங்களை கற்றுத்தந்தார். எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுத்தந்தார்.”
தன்ராஜ் மாஸ்டர்தான் ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றி அழைத்தவர். (பின்னாளில் ராஜா என்ற பெயரை இளையராஜா என்று மாற்றியவர் 'அன்னக்கிளி' பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், ராஜா என்று ஏற்கனவே ஒரு இசையமைப்பாளர் இருந்ததால்) தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்று வந்த காலத்தில்தான் ஜி.கே. வெங்கடேஷிடமிருந்து தன்ராஜ் மாஸ்டருக்கு ஒரு அழைப்பு வந்தது தன் இசைக்குழுவில் ஒரு பாடலுக்கு “ஆர்கன்” வாத்தியத்தை வாசிக்க. தன்ராஜ் மாஸ்டர் தனக்கு உதவியாக இளையராஜாவை அழைத்துச் சென்றார்.
(ஜி.கே.வி – எம்.எஸ்.வி அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ''நெஞ்சில் ஓர் ஆலயம்'' படத்துடன் தனியாக பிரிந்து இசையமைப்பாளராக ஆனவர். அதிகமான கன்னடப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தவர்.)
தன்ராஜ் மாஸ்டர் ஜி.கே.வியிடம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய போது தன் மாணவன் என்று மட்டுமே அறிமுகப்படுத்தாமல் மியூசிக் டைரக்டர் என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன்பின் இளையராஜாவிடம் இது பற்றி சொன்ன போது, உன்னை என் மாணவன் என்றுதான் அறிமுகப்படுத்த நினைத்தேன். ஆனால் என்னை அறியாமல் அப்படி சொல்லிவிட்டேன் என்றாராம்....!!
Master Dhanraj is a famous and renowned music teacher in Madras (now Chennai). He is well known as the guru of greats such as Maestro Ilaiyaraaja,[1] Mozart of Madras A. R. Rahman,[1][2] veteran Chennai-based music teacher Mr.A.Abdul Sattar (who was the guru of music director Harris Jayaraj, D.Imman, S.Thaman, S.J.Suriya)and has won the Best Teacher Award from Trinity College London for the past 25 consecutive years,
popular Indian film music director Vidyasagar,[3] popular Malayalam music director Shyam and so many notable musicians in South India. Ilaiyaraaja (Previously called as Raasayya) joined Dhanraj Master as a student to learn musical instruments[4] and the master renamed and called him as just "Raaja". He is famous for teaching Western classical music.[5] Chennai, Thiruvanmiyur, U.vE.cA Library (Near Kalashetra) has his Tamil book ‘இசை விதி -> 180 degree -> பிரம்ம மேள பிரமாணம்’ – தஞ்சை தன்ராஜ் – 'icai vithi ->180 degree -> Bhramma Mela Pramanan' by Thanjai Dhanraj ( Music Law -> 180 degree -> Divine Raga system).

1 கருத்து:
மிக்க நன்று
கருத்துரையிடுக