thinamalar : சபரிமலை
: சபரிமலைக்கு தமிழக பெண்கள் 40 பேர் ஒரு அணியாக வருவதாக கிடைத்த தகவலை
தொடர்ந்து எருமேலி, நிலக்கல், பம்பையில் போலீசார் உஷார்
படுத்தப்பட்டுள்ளனர்.சபரிமலைக்கு
அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து
அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெண்கள்
வரவில்லை. ஐப்பசி மாத பூஜையில் 15 பெண்களும், சித்திரை ஆட்ட
திருநாளில் ஒருவரும், மண்டல காலம் தொடங்கிய பின்னர் ஆந்திராவில் இருந்து இரண்டு பெண்களும் வந்து திரும்பி சென்றுள்ளனர்.
இதனால்
நடந்த போராட்டங்கள் சபரிமலையை பாதிக்க செய்துள்ள நிலையில் போலீசும்
போராட்டக்காரர்களும் தங்கள் நிலை பாட்டை சற்று தளர்த்தியுள்ளனர். இதனால்
சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. அனில்காந்த் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இருந்து 40 பெண்கள் மொத்தமாக வருவதாகவும், இவர்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வந்த பின்னர் அங்கிருந்து சபரிமலை வர திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக இந்து அமைப்பின் மாநில தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆகியோர் இவர்களை அழைத்து உள்ளனர்.
இதுபோல மேலும் சில இந்து அமைப்புகள் பெண்களை அழைத்து வர உள்ளது. சபரிமலை வருவதோடு எருமேலி வாவர் பள்ளி வாசலையும் இதில் இழுப்பது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக