திங்கள், 4 செப்டம்பர், 2017

சமசீர் கல்வியை முடக்க போராடியவர்கள் ... நீட் ஆயுதத்துடன் வந்தார்கள் கொன்றார்கள்

Muruganantham Ramasamy: தனியார்பள்ளி லாபியின் கைங்கர்யத்தில் சமச்சீர்கல்வி திட்டத்தை முடக்க ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பல்பு வாங்கியது.. அதன் பின் அதை பொறுத்துக்கொள்ளஇயலாமல் அதே தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மாறவும்,புதிதாக சி.பி.எஸ்.ஸி பள்ளிகளை துவங்கவும் தடையின்மைசான்றுகளை வழங்கியதும் ஜெயாவின் அரசுதான்.. அப்போது கல்வி மீதான மாநிலங்களின் உரிமைபற்றி ஜெயாவிற்கு கவலையில்லை. கருணாநிதி கொண்டு வந்ததை காலியாக்க வேண்டும் என்கிற வன்மத்தை தவிர..
சி.பி.எஸ்.ஸி என்பது பணிமாறுதலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வியை தொடர்வதில் குழப்பம்இருக்க கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது.. இதில் தரம் மண்ணாங்கட்டி என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்யத்தனம்.. மேலும் எந்தவொரு பாடத்திட்டமும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் வல்லுநர்களால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வருகிறது.. எனவே எந்த மாநில பாடத்திட்டமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
உதாரணமாக ஒரு கேரள மாணவன் அவர்களின் உள்ளூர் மொழி தவிர தங்கள் மாநில நிலவியல் வரலாறு சமூகவியல் ஆகியவற்றை பயில்கிறான்..
அவனது நடைமுறை வாழ்க்கைக்கு அது அவசியமானது.. சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்தில் அது இருக்காது.. அப்படியானால் அது அவனது வாழக்கைக்கு எப்படி உதவும்..?
சமசீர் கல்வியை முடக்க ஜெயலலிதா நியமித்த  ரஜினியின்  மாமியார்  பத்மா சேஷாத்திரி தலைமையில்  அமைந்த குழுவுக்கு  எதிராக நீதிமன்றங்களில் போராடி   சமசீர் கல்வியை மீண்டும்  கொண்டு வந்தது வரலாறு

மருத்துவம் பொறியியல் இன்ன பிற தொழில்கல்வி இடங்கள் மட்டுமே கல்வியின் நோக்கமா என்ன? ஆமாம் என்றால் அது சுற்றியுள்ள சமூகத்தை அறியாத தரித்திரங்களைத்தான் உருவாக்கும்..
உண்மையில் பள்ளி அமைந்துள்ள மாநிலத்தின் வரலாறு, நிலவியல்,சமூகவியலை உள்ளடக்கிய வகையில் மேம்படுத்தப்பட வேண்டியது சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டம்தான்..
இதைத்தவிரவும் ஒன்றை செய்தாக வேண்டும்.. மத்திய அரசு ஊழியர்கள் ராணுவத்தினர் தவிர மற்றவர்களின் குழந்தைகள் சி.பி.எஸ்.ஸி பள்ளிகளில் அனுமதியில்லை என்று சொல்லிப்பாருங்கள்..
தரம் தண்டவாளம் என்பவனெல்லாம் பொட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான்..

கருத்துகள் இல்லை: