செவ்வாய், 1 நவம்பர், 2016

பாஜகவின் உபி தேர்தல் ஆதாய படுகொலைகள்

தேர்தல் ஆதாயப் படுகொலைகள்..
Image may contain: one or more people and outdoor
உத்திரப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் பாஜகவை பாடாய் படுத்துகிறது. இழந்த செல்வாக்கை எப்படியாவது மீட்டுவிடும் வேகத்தில் அதன் கைவசம் உள்ள ஒரே பாணியான இசுலாமிய எதிர்ப்பு மற்றும் படுகொலைகளை கையிலெடுத்துள்ளது. எல்லையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று பெயரிட்ட இசுலாமிய நாட்டின் மீது போர் எனும் நாடகத்தின் மூலம் தனது இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சி ஏறக்குறைய தோல்வியில் முடிந்தது. சமாஜ்வாடியின் இடைச்சாதி அரசியலின் முன் அது எடுபடாமல் போய்விட்டது.
அடுத்து உள்நாட்டுப் போர். அது உத்திரப் பிரதேசத்தின் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலிருந்து இசுலாமியத் தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டவர்களை படுகொலை செய்வதின் மூலம் உத்திரப் பிரதேசத்தில் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் பாஜகவின் மற்றொரு முயற்சி.

தொடர்ந்து இசுலாமிய பயங்கரவாதம் என்பதை முன்னிருத்தி வளரும் இந்து பயங்கரவாதம் நாட்டை எங்கு கொண்டுபோய் முடியுமோ.. முகநூல் பதிவு
சன்னா</

கருத்துகள் இல்லை: