சனி, 5 நவம்பர், 2016

பெண்ணை கடத்தி லாட்ஜில் அடைத்து 20 நாட்கள் ... நம்ப ஸ்காட்லாந்து போலீஸ் பண்ணிய அநியாயம்

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் நீலா. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆனது. காதல் திருமணம். கணவன் முருகேஷ். நல்லவன் போல நடித்துக் காதலித்தான். வீட்டை விட்டு ஓடிவந்து அவனை கரம் பிடித்தாள் நீலா.
கல்லூரியைக் கூட முடிக்கவில்லை. வீட்டில் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். கல்யாணம் ஆகி இரண்டே மாதங்களில் கணவன் மொடாக் குடிகாரன் என்பது   அறிந்து நொந்து போனாள் நீலா.
திருத்தப் போராடினாள். ம்கூம்.. கொண்டு வந்த நகை ஒவ்வொன்றாக காலி. பக்கத்து வீட்டை சேர்ந்த வளன் என்பவர் இனி இவனை நம்பினால் பிச்சை தான் எடுப்பாய்..பாண்டிச்சேரியில் ஒரு ஆசிரமத்தில் வேலை இருக்கிறது. போய் பிழைக்கிற வழியைப் பாரு என்று கூறி விலாசம் போன் நம்பர் கொடுத்தார்.
வேறு வழி இல்லை..! இனி அதுதான் சரி என்று கிளம்பி விட்டாள் நீலா. அதிகாலை நாலு மணிக்கு பாண்டி போய் இறங்கினாள்.
சனி பிடித்தது. ரோந்து போலீஸ் அவளை மடக்கி கேள்விகள் கேட்டு மிரட்ட கணவனை விட்டு ஓடி வந்ததை கூறி அழுதாள்.
அவளை பரிவுடன் பேசி ஒரு லாட்ஜுக்கு அழைத்துப் போய் தங்கவைத்தனர் மூன்று போலீஸ்கள்..!

காலையில் டிபனோடு வந்தார்கள். காபி வாங்கி வந்தார்கள். சாப்பிட்டாள் நீலா. கொஞ்ச நேரத்தில் மயங்கிப் போனாள். மூன்று மிருகங்களும் மாற்றி மாற்றி சூறையாடினார்கள்..!
மதியம் மயக்கம் தெளிந்து எழுந்தாள் நீலா. உடம்பு ரணமாக வலித்தது.உடம்பில் துணி இல்லை. போலீஸ்காரர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
கத்தி கதறினாள். அவள் வாயில் கட்டாயமாக பிராந்தியை ஊற்றினார்கள். மீண்டும் மயக்கம். வேறு சில பணக்கார மிருகங்கங்களும் வந்து சேர்ந்தனர்.
மீண்டும் வேட்டை..! இரண்டே நாளில் கிழிந்த நாராக துவண்டு கிடந்தாள் அந்த அழகான நீலா. இருபது நாள் மயக்கத்திலேயே வைத்து மாறி மாறி விளையாண்டார்கள்..
இனி செத்து விடுவாள்  என்று அறிந்து இரவு தூக்கிக்கொண்டு போய் அரவிந்தர் மடம் வாசலில் போட்டு விட்டு போய்விட்டது அந்த மிருகங்கள்.
ஆசிரமத்தினர் பதறி..தூக்கிப் போய் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள். இப்போதும் சித்தப் பிரமை பிடித்து மடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார் அந்த பரிதாப நீலா. லிவ்டி.காம்

கருத்துகள் இல்லை: