வியாழன், 3 நவம்பர், 2016

இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை

இந்திய - இலங்கை மீனவர் பிடிவாதம் : டில்லி பேச்சில் பலனில்லை?; டில்லியில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த, இந்திய -- இலங்கை மீனவர்களுக்கு இடையி லான பேச்சில், இருதரப்புமே தங்கள் கோரிக்கை களில் உறுதியாக இருந்ததால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சு, நேற்று, டில்லியில் உள்ள, வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள நேரு பவனில் நடந்தது.



மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த பேச்சு, இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் மட்டுமே நடந்தது. அரசு தரப்பிலிருந்து இதற்கு உதவிகள் மட்டுமே செய்யப்பட்டன. இதனால், இரு தரப்பைச் சேர்ந்த, மீனவர்களும் தங்கள் கோரிக்கைகளை மனம்விட்டு, வெளிப்படை யாக பேசும் வகையில் இந்த கூட்டம் இருந்தது.

தமிழக மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதி களாக, நாகபட்டினத்தைச் சேர்ந்த, சிவஞானம், வீரமுத்து, சித்ரவேலு, ஜகநாதன், தஞ்சாவூரை சேர்ந்த, ராஜமாணிக்கம், புதுக்கோட்டையின் குட்டியாண்டி,ராமகிருஷ்ணன், ராமநாதபுரத்தை
சேர்ந்த, தேவதாஸ், ஜேசுராஜா, அருளானந்தம், அருள், ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு தரப்பில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார், மீன்வளத் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மீன்வள ஆணையர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இலங்கை தரப்பில், மீனவ பிரதிநிதிகள், 10 பேர் பங்கேற்றனர். இரு கட்டங் களாக நடந்த இந்த பேச்சில், தமிழக மீனவர்கள், முக்கிய பிரச்னையாக, தங்களுக்கு எல்லை வகுத்து மீன்பிடிக்க வலியுறுத் துவதை முன்வைத்தனர். பல ஆண்டுகளாக, தங்களுக்கு இருக்கும் மீன்பிடி உரி மையை விட்டுத்தந்தால், முற்றிலுமாக வாழ்வா தாரம் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டினர்.


பிரச்னை ஏற்பட்டால், அதை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வராமல், படகுகளை கைப்பற்றுவது, கைது செய்வது, தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்பதையும் வலியுறுத்தினர்.


விசைப்படகுகள் பயன்பாடு குறித்த பிரச்னைக்கு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு என, பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருவதாகவும், அவை முழு வடிவம் பெறும் போது, சுமூக தீர்வு ஏற்பட ஒத்துழைப்பு தருவதா கவும், தமிழக மீனவர்கள் குறிப்பிட்டனர்.


இலங்கை மீனவ பிரதிநிதிகளின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட மிக முக்கியகோரிக்கை, தங்கள் கடல் பகுதிக்குள் வந்து, ராட்சத படகுகளை பயன் படுத்தி மீன் பிடிப்பதை, தமிழக மீனவர்கள் தவிர்க்க
Advertisement
அளவிலான முன்னேற்றம் இந்த பேச்சில் ஏற்பட வில்லை என, தெரிகிறது.
பேச்சு மிகவும் சுமூகமாக நடந்தது. மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். அதே சமயம், தமிழக அரசு டன் ஆலோசிக்காமல் முடிவுகளை எடுக்கவும் கூடாது. இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான பேச்சு, வரும், 5ல் நடக்கும்.


ஜெயக்குமார், தமிழக மீன்வளத் துறை அமைச்சர், அ.தி.மு.க.,
தமிழக மீனவர்கள், எங்கள் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க,ஒருபோதும் அனுமதிக்க மாட் டோம். எல்லை தாண்டியதற்காக கைது செய் யப்படும் மீனவர்களை விடுவிப்பதில், எங்க ளுக்கு எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு களை திரும்ப தர அனுமதிக்க மாட்டோம். அடுத்த கட்ட பேச்சிலும், எங்கள் நிலையில் உறுதியாக இருப்போம்.
இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள்
- நமது டில்லி நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: