நெட்டைத் தொட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
"தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுபற்றி நான், 30.8.16 டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருக்கிறேன். அப்போது நான்சொல்லும்போது, ‘ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுக்கும் சசிகலா புஷ்பா விவகாரம்தான் காரணம் என்கிறார்கள். 2014ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின்தலைவராக இருந்தவர் கு.ஞானதேசிகன். அந்தப் பதவியிலிருந்து அவர் திடீரென மாற்றப்பட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த அதிமுகஆட்சியில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் முக்கியமானவராகச் செயல்பட்டதும் ஞானதேசிகன்தான். கடந்த டிசம்பர் மாதம், மழை வெள்ளத்தில்சென்னை சிக்கித் தவித்தபோதுதான் ஞானதேசிகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.
மழைகுறித்த முன்னேற்பாடுகளை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது.ஆனாலும், ஜெயலலிதா அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஞானதேசிகன் தலைமைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்துவந்தார். கடந்த மே மாதம் மீண்டும் அதிமுகஅரசு ஆட்சி அமைத்ததும், தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் எம்.டி.யாக நியமிக்கப்பட்டார்.தற்போது, ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகச் செயல்படுபவர் என வைகுண்டராஜன்மீது கோபத்தில்தான் இருந்தார்ஜெயலலிதா. இந்த நேரத்தில் வைகுண்டராஜனுக்கு எதிராக வந்த ஒரு ஃபைலில் ஞானதேசிகன் கையெழுத்துப் போடவில்லை என்று சொல்கிறார்கள். இதெல்லாம் முதல்வர்கவனத்துக்குப் போனபிறகுதான் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஏற்கனவே, ஞானதேசிகன் மின்வாரியத்தில் பணிபுரியும்போது அவர்மீது சில குற்றச்சாட்டுகளும்இருந்துள்ளது. தற்போது, அதையெல்லாம் தூசுதட்டி எடுக்கவும் உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்" என்று, அப்போது சொல்லியிருந்தேன்.
ஞானதேசிகனுடன் சேர்ந்து கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரான அதுல் ஆனந்த்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இருவரது சஸ்பெண்டுக்கும் இதுவரைதமிழக அரசு எந்தக் காரணமும் சொல்லவில்லை. இது சம்பந்தமாக, எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க மட்டுமேசெய்தார்களே தவிர, சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் சொல்லவில்லை. இருவருடைய சஸ்பெண்டுக்குப் பின்னணியிலும் தாதுமணல் விவகாரம்தான் சுற்றுகிறது.
2011-12ஆம் ஆண்டுகளில், தாதுமணல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த வைகுண்டராஜனுடன் தொடர்பில் இருந்தாராம் அதுல் ஆனந்த். இது தொடர்பாக, அரசுக்கு அப்போதுதெரியும் என்றாலும் நடடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்போது வைகுண்டராஜன் அரசுக்கு வேண்டாதவர் ஆகிவிட்டதால், இந்த விவகாரத்தில் அதுல் ஆனந்த்தும் சிக்கிக்கொண்டார். தாது மணல் என்பது அரசு சொத்து. அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதாவது, தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிறார் என்றபிரிவின்கீழ் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்கிறார்கள். அப்படி சஸ்பெண்ட் செய்யப்படும்பட்சத்தில், அதற்கான காரணத்தை அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லையாம். அதனால்தான், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் விவகாரம் ஆகட்டும், ஞானதேசிகன் சஸ்பெண்ட் விவகாரம் ஆகட்டும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்துவாய் திறக்காமல் இருக்கிறார்கள். சசிகலா புஷ்பா என்ற ஒருவர்மீது ஜெயலலிதாவுக்கு உள்ள கோபம்தான் பழைய விவகாரங்களை எல்லாம் தோண்டி எடுத்து நடவடிக்கைஎன்றபெயரில் பழிவாங்கும் படலத்தைத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்" மின்னம்பலம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக