Vasan Eye Care Scam: How Express Exposed, Chidambaram's Lies
New Proof Nails PC Lies in Rs 223 Crore , Black Money Trail
Chidambaram Fails to Answer, Serious Posers on Vasan
After Express Expose, Vasan Healthcare Director Quits
P Chidambaram,, Vasan Eye Care and Rs 223 Crore Black Money .
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதுடன், சம்மனுக்கு எதிராகவும் கார்த்தி சிதரம்பரம் கேள்வி கேட்டுள்ளார். சம்மன் ஒன்றிற்கு எதிர் கேள்வி எழுப்பி உள்ள கார்த்தி சிதம்பரம், நான் என்ன குற்றம் செய்தேன்? என கேட்டுள்ளார். தனது கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளித்த பிறகு நல்ல முடிவை எடுக்க உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சம்மன்களை தவிர்த்து வருவதால் கார்த்தியை கைது செய்து, விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தன் மகனை காக்க பா.சிதம்பரம் தன்னாலான முயற்சிகளை செய்து வருவதாகத் கூறுப்படுகிறது. “மத்திய நிதி அமைச்சரும் பா.சிதம்பரமும் வழக்கறிஞர்கள் என்ற முறையில் நண்பர்கள். எனவே இந்த விவகாரத்தில் மகனுக்காக ஜெட்லியின் உதவியை நாடியிருக்கிறார் பா.சிதம்பரம். ஜெட்லியும் கார்த்திக் சிதம்பரத்திற்காக மோடியிடம் பேசியிருக்கிறார். ஆனால் அமைச்சரவையைப் பொருத்தவரை அருண் ஜெட்லியும் சுஷ்மா சுவராஜும் எதைக் கூறினாலும் அதற்கு எதிராக செயல்படுபவர் மோடி. ஆகவே ஜெட்லியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆகவே கார்த்திக் சிதம்பரம் அக்டோபரில் கைது செய்யப்படலாம்” என்று மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக