செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தலைமை செயலர் ஞானதேசிகன் பதவி இடைநீக்கம் ..

மின்னம்பலம்.காம் :தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத் தலைவர் பதவியில் இருந்து கே.ஞானதேசிகன் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 1959இல் திருநெல்வேலியில் பிறந்த இவர், பொறியியல் படித்தவர். பின்னர் லண்டனில் சமூக அறிவியலில் மேற்படிப்பை முடித்திருக்கிறார். 1982இல் இந்திய ஆட்சி பணி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன், அப்பதவியில் இருந்து அண்மையில் மாற்றப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயலராக பி.ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ)-த்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்தான் கே.ஞானதேசிகன் திடீரென்று தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகன் ஏன் மாற்றப்பட்டார் என்பதும் தற்போது அவர் என்ன காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. இதன் பின்னணி விவரம் மின்னம்பலத்தின் ஏழு மணி அப்டேட்டில் தரப்படும்

கருத்துகள் இல்லை: