செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

கரூரில் மாணவி வகுப்பறையில் அடித்து கொலை.. மாணவன் உதயகுமார் வெறிச்செயல்

கரூரில் இயங்கிவரும் கரூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டுகட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். >ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் இன்ஜினியர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த சிவகங்கை மாவட்டம், மானமதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி (21). இவரை உதயகுமார் ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்துள்ளார். காதலை உதயகுமர் கூறியதற்கு சோனாலி ஏற்றகமறுத்துவிட்டார்.


மேலும் உதயகுமார் கல்லூரியில் விரும்பதாகத செயல்களில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டது. இந்நிலையில் பல மாதங்கள் பிறகு செவ்வாய்கிழமையன்று காலை கல்லூரிக்கு வந்த உதயகுமார் தான் மீண்டும் கல்லூரியில் இணைந்துவிட்டதாககூறி கல்லூரிக்குள் சென்று, சோனாலி வகுப்பறையில் படித்துகொண்டுயிருப்பதையறிந்து வகுப்பறைக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.;

இதனை சோனாலி மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் கையில்வைத்திருந்த பெரிய கட்டையால் சோனலியின் தலையில் கடுமையாக தாக்கியதில் இரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்துவிட்டார். இதனை சக மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் தடுத்த போது அவர்களையும் தாக்கியுள்ளார்.  இதனை பார்த்து பயந்துபோன சகமாணவிகள் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டார். பிறகு மேல்சிகிச்சைக்கு மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சோனாலி பறிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் மதுரையில் மருத்துவமனைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயகுமார் மாணவியை தாக்கிவிட்டு அதிக நேரமாக கல்லூரி வளாகத்திலேயே கட்டையுடன் இருந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தப்பி ஓடிய உதயகுமாரை போலிசார் பிடித்தனர்..;">மாணவி தாக்குதலுக்குண்டான பிறகு கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துவிட்டது. கல்லூரியில் இருந்துவந்த மாணவர்கள் கல்லூரியின் முன்பு நின்று கல்லூரிக்கு பாதுகாப்பு ஏற்படுத்திட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோஷமிட்டனர். இதனையடுத்து மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்

கல்லூரியில் பாதுகாப்பு குறைபாடு
;இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறும் போது கல்லூரியில் ஒருவர் தனியாக கட்டையுடன் வந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பேரசிரியர்கள் இருக்கும் இடத்தில் வகுப்பறையில் சக மாணவியை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். இக்கல்லூரியில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லை. மாணவி பாதிக்கப்பட்டவுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எவ்வித வாகன வசதியும் கல்லூரியில் இல்லை. பிறகு ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்கபட்டடு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிகநேரம் வீணானது. எனவே கல்லூரி நிர்வாகம் இக்கல்லூரியில் அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்."
ஜெ.டி.ஆர்.  நக்கீரன.இன்

கருத்துகள் இல்லை: