புதன், 31 ஆகஸ்ட், 2016

டெல்லி மிகபெரும் விபசார மாபியா பிடிபட்டது ,,, சுமார் 5000 பெண்ளை கடத்தி ஜி பி ரோட்....

The Delhi Police on Tuesday arrested eight people on suspicion of human trafficking. The arrested include a couple - Saira Begum and Aafaq Hussain, who had an unchecked run as trafficking kingpins in Delhi`s Garstin Bastion (GB) Road - and six of their aides.டெல்லி: விபசார தொழிலில் கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்கு நடைபெறும் விபசார தொழிலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், 80 சதவீத தொழிலை அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற தம்பதி, ரவுடிகள் துணையுடன், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது. Husband and wife charged with running prostitution business நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்த கணவன் - மனைவி அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தலைமறைவாகி விட்டார். விசாரணையில், சாய்ரா பேகம், விபசார அழகியாக இருந்து, விபசார விடுதிக்கே உரிமையாளர் ஆனது தெரிய வந்தது. அவர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நேபாளத்தில் இருந்து சிறுமிகளை ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று விலைக்கு வாங்கி வந்து, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த தொழிலில் 5000க்கும் மேற்பட்ட பெண்களை ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்ததுடன், வங்கியிலும் பல கோடி ரூபாய் போட்டு வைத்துள்ளனர். 4 சொகுசு கார்களும் வாங்கி உள்ளனர். டெல்லியில் 4 சொத்துகளும், பெங்களூருவில் 2 சொத்துகளும் வாங்கி உள்ளனர். மேலும், 6 விபசார விடுதிகளுக்கும் உரிமையாளர்களாக இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த 28ம் தேதி நடத்திய திடீர் சோதனையில் பூஜா, ஷாம்சத், ஷில்பா மற்றும் மும்தாஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சர்பரஸ் என்ற பில்லி தலைமறைமாகிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபசார தொழில் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் அதன் மூலம் 15 சதவிகிதத்தை மாத சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.

Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: