சென்னை: சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து நாயை தூக்கி போட்ட மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஜூலை மாதம் சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து வளர்ப்பு நாயை தூக்கி
போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடர்பாக போலீசில்
புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் மாடியிலிருந்து நாயை வீசியவர்
நெல்லையை சேர்ந்த கவுதம் சுதர்சன் எனவும், இதனை படம்பிடித்தது அவரது
நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ஆசிஸ் பால் எனவும் தெரியவந்தது. இவர்கள்
மருத்துவ கல்லூரி மாணவர்கள் எனவும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார்
அறிவுரைப்படி, மாணவர்களை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலையானார்கள்.
மாணவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாணவர்களுக்கு மருத்துவ பல்கலை நிர்ணயம் செய்யலாம். அந்த தொகையை விலங்குகள் நல வாரியத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து கவுதம் சுதர்சன், ஆசிஸ் பால் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அகில இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் வழங்கப்பட உள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக