வியாழன், 1 செப்டம்பர், 2016

சகாயம் ஐ ஏ.எஸ் : இத்தனை அதிகாரிகளில் நீங்கள் மட்டுமே இந்தி தெரியாது என்று குற்றம் சாட்டிய டெல்லி....

சிலகாலம் முன்பு டெல்லியில் எங்களைப் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர். அங்கு பயிற்சி அளிக்க வந்த ஒரு பெண் அதிகாரி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அதுவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் திடீரென்று இந்தியில் பேசத் தொடங்கிய போது, நான் எழுந்து, “உங்களுடைய இந்தி மொழியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்று சொன்னேன்.
உடனே அந்த பெண் அதிகாரி, “உங்களுக்கு இந்தி தெரியாதா..? இந்தி நமது தேசிய மொழி” என்றார். நான் உடனே, “இந்தி எனது தேசிய மொழி அல்ல. இந்தி அலுவல் மொழி மட்டுமே. எனது தேசிய மொழி தமிழ்” என்றேன்.
“இங்கே உள்ள இத்தனை அதிகாரிகளில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்தி தெரியாது என்கிறீர்கள்” என்றார் அந்த பெண்மணி. நான் உடனே, “அதற்கு காரணம், இந்திய துணைக்கண்டம் முழுதும் இந்தியை திணித்தபொழுது அதை எதிர்த்துப் போராடிய ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே” என்றேன். “இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல. அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றேன்.

- சகாயம் IAS  முகநூல் பதிவு ஆளூர் ஷாநவாஸ்



 தமிழகத்தில் பரவலாக, உயர்வாக, மதிப்புமிகுந்ததாக ஹிந்தி கருதப்படுகிறது. ஹிந்தி படித்தால் அரசுவேலை கிடைக்கும் அதுவும் மத்திய அரசுபணி என்று கூறப்பட்டு மாங்கு மாங்கென்று ஹிந்தி பயின்று வரும் தமிழ்மக்களுக்கான சவுக்கடிதான் இது. அதோடு ஹிந்திபடித்த ராஜஸ்தான் சேட்டுகளெல்லாம் இங்கேதான் பிழைக்கிறார்கள் கோடீஸ்வரனாக.,ஹிந்திபேசும் பஞ்சுமிட்டாய்காரனும், ஹிந்திபேசும் குல்பி ஐஸ்காரன், சாலையோர கண்ணாடி ஹிந்தியும் இப்போ சொல்லுங்க. எந்தமொழி வேலையையும், ஏழையையும், பணக்காரனையும் உருவாக்குது. முகநூல் பதிவு  பவுன்ராஜ்

கருத்துகள் இல்லை: