ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பாஜக மத்திய அமைச்சர் அனந்தகுமார் : தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது

பெங்களூரு: ''தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது,'' என, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் வழங்க, கர்நாடகாவுக்கு உத்தரவிடும்படி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா தலை மையில், பெங்களூருவில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது.   இவர் என்ன முட்டாளா? கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வாழவில்லையா?.அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வார்? இவர்களா தண்ணீரை தயார் செயகிரர்கள். சமீபத்தில் அபரிதமான மழையினால் பெங்களூரு நகரமே அல்லகோலப்பட்டதே.அப்படியும் அறிவு வரவில்லையே.இயற்கை விளையாட தொடங்கினால்  இவர்கள் எல்லாம் இப்படி பேசுவார்களா. அதே போல் பெங்களூருக்கு நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தலாமா என்று ஏன் நாம யோசிக்ககூடாது?


மத்திய பா.ஜ., அமைச்சர் அனந்த குமார், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அனைத்து எம்.பி.,க்கள், காவிரி நிதி பகுதியின் எம்.எல்.ஏ.,க் கள் உட்பட, பலர் இதில் பங்கேற்றனர்.கூட்டம்
முடிந்ததும், முதல்வர் சித்தராமையா கூறிய தாவது: கர்நாடகாவிலி ருந்து, 50டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடக் கோரி, உச்ச நீதிமன்றத் தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

அனைத்து கட்சி தலைவர் கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி, இதுகுறித்து விரிவாக விவாதித்தோம். 'தற்போதைய சூழ்நிலையில், தண்ணீர் தர வாய்ப்பில்லை' என, தமிழக விவசாயிகளுக்கு ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்.

மாநிலத்தில், போதிய மழை இல்லை; பல இடங் களில் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, காவிரி நதியின் நான்கு அணைகளில் மொத்தம், 51 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது.

இதில் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஆகிய நகரங்களின் குடிநீருக்கு, 40 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல் விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லை.

ஆனால், 50 டி.எம்.சி., தண்ணீர் வழங்க கோரி, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 'தமிழகத் திற்கு தண்ணீர் வழங்க முடியாது' என, கர்நாடக மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க, அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு இதுவரை, 29 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.'குடிப்பதற்கே தண்ணீர் இல்லை' :

காவிரி நீரை நம்பியுள்ள கர்நாடக விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பெங்களூருவிலேயே குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; மழைஇன்றி அணைகள் வறண்டுள் ளன; தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உருவாகி உள்ளது. தமிழகத் திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும்படி, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். என  மத்திய அமைச்சர் அனந்த குமார் கூறினார் தினமலர்.com

கருத்துகள் இல்லை: