ஆவணங்களைப்
பார்த்தபின், அரசுத் தரப்பிடம் கோபப் பட்ட சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி
தாக்கூர், ""சசிகலா புஷ்பா நேரில் ஆஜ ராக வேண்டும் என தமிழக அரசு தீவிரம்
காட்டுவதில் ஏதோ மறைவான உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. தமிழக அரசின்
செயல்களின் பின்னணியில் பழிவாங்கும் உணர்வு அடங்கியுள்ளது'' என கூறிவிட்டு,
"சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்குத் தடை' என தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவு, கார்டனை அதிர வைத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜெ. தலைமையி லான தமிழக அரசுக்கு கடந்த வாரம் முழுவதும் கண்டனக்கணையை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துக்கொண்டேயிருந்தது.
முதலாவது கண்டனம், சுப்ரீம் கோர்ட்டில் விஜயகாந்த் தாக்கல் செய்த வழக்கில் கிடைத்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிலேயே பெரிதும் மதிக்கப்படும் நீதிபதி தீபக் மிஸ்ராவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் அனல் பறந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் அனைத்திற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அதை எதிர்த்து விஜயகாந்த், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தீபக் மிஸ்ரா விசாரித்தபோது, மடமடவென மனம்விட்டுப் பேசினார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி நாகப்பனும் இணைந்துகொண்டார்.""பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் வருவது இயல்பானதுதான். அதை அவர்கள் ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் என்பவர் பொதுவாழ்வில் உள்ள முக்கிய பிரமுகர்.
அவரை எதிர்த்து "அரசை நடத்த தகுதி இல்லை' என விமர்சனங்கள் வரும். "அரசாங்கத்தில் ஊழல்' என விமர்சனம் வரும். அதை எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடருவது என்பது அவதூறு வழக்கு தொடருவதற்காக அரசியல் சாசன சட்டம் அறிவித்துள்ள அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்துவதாக மாறிவிடும்
அவதூறு வழக்கை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த சட்டம் அனுமதித்துள்ளது. இப்படி ஒரு சட்டத்தை தவறாக பயன்படுத்தி சரியான காரணமில்லாமல் வேண்டு மென்றே பழிவாங்கும் நோக்கில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டால் இந்தத் தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சுப்ரீம் கோர்ட்டுக்கு இருக்கிறது. அரசு எந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற அவதூறு வழக்குகளை நடத்தும் ஒரே மாநிலம் தமிழகம்தான். மற்ற மாநிலங்களில் இதுபோல அதிக அளவில் அவதூறு வழக்குகள் தொடராத நிலையில்... தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? தமிழ் நாட்டில் விமர்சனங்களை ஏற்று நடக்கும் ஆரோக் கியமான ஜனநாயகம் நிலவவில்லை என்றுதான் நாங்கள் புரிந்துகொள் கிறோம்'' என்றனர்.
;நீதிபதிகள் மிக ஆவேசமாக தமிழக அரசை விமர்சித்தபோது... தமிழக அரசு சார்பில் ஆஜரான சுப்ரமணிய பிரசாத் மற்றும் யோகேஷ்கன்னா ஆகியோர் எதுவும் பேசாமல் நின்றார் கள். இறுதியாக "இந்தக் கேள்விக்கு என்ன பதில்' என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டுத்தான் அமைதியானார் கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.
;தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் தமிழக அரசை அவதூறு வழக்கில் கடுமையாகக் கண்டித்ததற்கு அடுத்தநாள் அ.தி.மு.க. எம்.பி.யான சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தாக்கூர், கன்வில்க்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி, "ஆகஸ்ட் 29 அன்று சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் தாயார் ஆகியோர் தங்களின் முன்ஜாமீன் மனு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனு தாக்கல் செய்திருந்தார் சசிகலா புஷ்பா. இந்த வழக்கில் சித்தார்த் லூத்ரா என்கிற பெரிய வக்கீல் சசிகலா புஷ்பாவுக்காக வாதாடினார்.
"2011ஆம் வருடம் எங்களிடம் வேலை பார்த்த சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு வழக்கை தமிழக போலீசார் பொய்களை அடுக்கி பதிவு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அவர்களது உத்தரவுப் படி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தோம். அவர்கள் 29-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தர விட்டுள்ளனர்'' என சசிகலா புஷ்பா தரப்பு வக்கீல்கள் வாதிட்டுக்கொண்டிருக்கும்போதே தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்ரமணியம் பிரசாத், ""மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை அவரது வழக்கறிஞர் "திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என கூறிவிட்டார்'' என்றார். "அது பொய்' என சித்தார்த் லூத்ரா ஆவணங்களைக் காட்டி தலைமை நீதிபதிக்கு விளக்கினார்.
ஆவணங்களைப் பார்த்தபின், அரசுத் தரப்பிடம் கோபப் பட்ட சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தாக்கூர், ""சசிகலா புஷ்பா நேரில் ஆஜ ராக வேண்டும் என தமிழக அரசு தீவிரம் காட்டுவதில் ஏதோ மறைவான உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. தமிழக அரசின் செயல்களின் பின்னணியில் பழிவாங்கும் உணர்வு அடங்கியுள்ளது'' என கூறிவிட்டு, "சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்குத் தடை' என தீர்ப்பளித்தார். இந்த உத்தரவு, கார்டனை அதிர வைத்துள்ளது.
தலைமை நீதிபதி தாக்கூர், தீபக் மிஸ்ரா போன்ற சீனியர் நீதிபதிகள், இவர்களுடன் நாகப்பன் போன்ற ஜுனியர் நீதிபதியிடமிருந்தும் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து ஜெ. அரசின் மீது அடுத்தடுத்து வெளிப்பட்ட கண்டனங்கள் குறித்து ஜெ. தரப்பு வக்கீல்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில்... இப்படிப்பட்ட; தொடர்ச்சி யான கடும் விமர்சனங்களை கார்டன் எதிர்பார்க்கவில்லை.<">படங்கள் : ஸ்டாலின், ராம்குமார் விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக