நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மலையாளி கவுண்டர், நரிக்குறவர், குருவிக்காரன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றகோரி மாநிலங்கள் அவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக அவர் , இது தொடர்பாக தனி நபர் மசோதா கொண்டு வந்தார் என்பது முக்கியமானது.
இந்த சட்டதிருத்தம் காரணமாக நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அம்மக்கள் கல்வி கற்க இயலும்.
இதனிடையே “நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக” அம்மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் தங்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஜெயசீலன் தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கை நிறைவேற வாதாடிய திருச்சி சிவாவை அந்த சமூக மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். thetimestamil.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக