செவ்வாய், 7 ஜூன், 2016

அமெரிக்க பல்கலை.யில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு."இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. கம்ப்யூட்டர் சயன்ஸஸ் முதல் செமஸ்டரில் உள்ள இந்திய மாணவர்கள் 25 பேரை வெளியேறுமாறு அமெரிக்காவின் வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று இந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் பிற பல்கலைக் கழகங்களில் சேர முயற்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை இந்த மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் நடைபெற்ற மாணவர் தேர்வு சுமார் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது பல்கலைக் கழகத்தில் உடனடியாக அனுமதி கிடைக்கும் என்று தேர்வாளர்கள் விளம்பரம் செய்தனர்.

இந்நிலையில், வெஸ்டர்ன் கெண்டகி கணினி அறிவியல் திட்டத்தின் தலைவர் ஜேம்ஸ் கேரி நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தில் கூறும்போது, “குறைந்தது 40 மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்படுவதற்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் இம்மாணவர்களுக்கு உதவியும் பல்கலைக் கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அதாவது மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுதமுடியவில்லை. அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான கல்வித்திட்டத்தில் சேர இது அடிப்படை விதிமுறையாகும்.

“எனவே இவர்கள் இங்கிருந்து கணினி புரோகிராம்களை எழுத முடியாமல் சென்றால் எனது துறைக்கு அது களங்கத்தை விளைவிப்பதாக அமையும், எனவேதான் இவர்களைத் தொடர அனுமதி அளிக்க முடியாமல் இருக்கிறோம்” என்றார் ஜேம்ஸ் கேரி.

இதனையடுத்து இனி வரும் காலங்களில் பல்கலைக் கழகமே தங்களது கணினித் துறை உறுப்பினர்களை இந்தியா அனுப்பி மாணவர்கள் சேர்க்கை முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது.

இதே பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர்கள் சங்கத் தலைவர் ஆதித்யா சர்மா கூறும்போது, “இந்த மாணவர்களை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. இவ்வளவு தூரம் வந்து விட்டனர், பணத்தை ஏகப்பட்டது செலவு செய்துள்ளனர், எனக்கு இவர்களை நினைத்தால் சங்கடமாக உள்ளது. இவர்கள் தங்கள் படிப்பு, கரியர் குறித்து சற்றே அலட்சியமாக இருந்து விட்டனர் என்றே கருத வேண்டியுள்ளது.
பல்கலைக் கழகம் நிர்ணயித்த தரநிலையான கிரேட் பாயிண்ட் ஏவரேஜ் (ஜிபிஏ) என்பதை இவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் பல்கலைக் கழகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது” என்றார். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: