சென்னை: சில்லறை வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆக முடியாமல் போன
தவிப்பில் பலரும் உள்ளனர். அது காரணம், இது காரணம் என்ற வாதப்
பிரதிவாதிங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் தமிழகத்தில்
பதிவான தபால் வாக்குகளில் 23,000 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற
அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் தொகுதியில்தான் அதிக அளவிலான செல்லாத தபால் வாக்குகள்
பதிவாகியுள்ளதாகவும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால்
வாக்குகள்தான் பலரது வெற்றி வாய்ப்பை பறித்துள்ளதாகவும் தெரிகிறது.
சிதம்பரம் தொகுதியில் 777 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற
அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப்
பிடித்துள்ளது. திமுக 2வது இடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள், கட்சிகள்
அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப்
பிடித்துள்ளது. திமுக 2வது இடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள், கட்சிகள்
அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன
பலர் தோல்வி
திமுகவைச் சேர்ந்த பலர் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்
தோல்வியுற்றுள்ளனர். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். ராதாபுமரம்
திமுக அப்பாவு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
தபால் வாக்குகளால் வந்த வினை
இப்படி வாக்குகள் பிரிய அவர் காரணம், இவர் காரணம் என்று வாதங்கள் நடந்து
வந்தாலும் கூட உண்மையில் தபால் வாக்குகள்தான் பெரிய பஞ்சாயத்தைக்
கூட்டியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
3.99 லட்சம் தபால் வாக்குகள்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3.99 லட்சம் தபால் வாக்குகள்
உள்ளன. இதில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 551 பேர் மட்டுமே தபால் வாக்கைப்
பதிவு செய்தனர். அதில் 23,886 வாக்குகள் செல்லாத வாக்குகளாகியுள்ளன.
காரணம் பல
சரியாக முத்திரை பதிக்கப்படாதது, அதிகாரிகள் கையெழுத்து இல்லாதது என பல
காரணங்களால் இவை செல்லாத வாக்குகளாகியுள்ளன. இந்த வாக்குகள் பல தொகுதிகளில்
தோல்வி அடைந்தவர்களின் தோல்விக்குக் காரணமாகவும் அமைந்துள்ளனவாம்.
சிதம்பரத்தில் 777
தொகுதிகள் வரிசையில் சிதம்பரம் தொகுதியில் 777 தபால் வாக்குகள் செல்லாத
வாக்குகளாக விழுந்துள்ளன. அதேபோல 1450 பேர் நோட்டாவுக்கு ஓட்டுப்
போட்டுள்ளனர்.
லையெழுத்து மாறியிருக்கும்
இந்த செல்லாத தபால் வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில்
இருந்திருந்தால் பலருடைய வெற்றி வாய்ப்பு உறுதியாகி இந்த நேரம்
எம்.எல்.ஏவாகியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more at: /tamil.oneindia.com/
Read more at: /tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக