இன்று
அதிகாலை ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நாவலை எழுதிய எழுத்தாளர் துரை.குணாவை
காரணங்கள் ஏதும் இல்லாமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டைகூட
அணிந்திராத நிலையில் எந்த அவகாசமும் அளிக்காமல் இழுத்து சென்றுள்ளது
காவல்துறை. அவர் தற்சமயம் புதுக்கோட்டையில் உள்ள கரம்பக்குடி காவல்
நிலையத்தில் உள்ளார். அவரது குடும்பத்தாரைக் கூட காவல்துறையினர் சந்திக்க
அனுமதிக்கவில்லை.
கைதுக்கான காரணத்தை இன்ஸ்பெகடர் சகாயம் அன்பரசுவிடம் வற்புறுத்தி கேட்டதற்கு, ”உன் புருஷன் ஒரு பையனை கத்தியால் குத்தி தையல் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கான். அதுக்காகத்தான் கைது பண்ணியிருக்கோம்” என்று கோகிலாவிடம் கூறினார். கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்படும் நபரை துரை. குணாவிற்கு யாரென்றே தெரியாது எனகிறார் கோகிலா.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஊரின் சாதிய இந்துக்களால் துரை.குணா மற்றும்
அவரது குடும்பத்தார் தொடர் தாக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும்
உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். பிரபல எழுத்தாளருக்கு ஒரு நீதி, அறியப்படாத
தலித் எழுத்தாளருக்கு ஒரு நீதி என்கிற வித்தியாசங்களை அகற்றி நம் சக
எழுத்தாளர் சந்திக்கும் ஒரு பெரு நெருக்கடி என அரசுக்கும் காவல்துறையின்
அத்து மீறல்களையும் கண்டிப்போம்.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் உடன் களத்தில் இறங்க வேண்டிய நேரமிது.
இன்று மாலை புத்தக கண்காட்சியில் ஒரு அடையாள போராட்டம் நடத்தலாம் என்பது என் யோசனை, சென்னை நண்பர்கள் உடன் முடிவு செய்யவும்.
துரை.குணா அவர்களின் தொலைபேசி அவரது துணைவியார் கோகிலா வசம் உள்ளது : 9942854766
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி காவல் நிலைய தொலைபேசி : 04322255238

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக