அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இந்திய பிரதமர்
நரேந்திர மோடியின் உரைக்கு 66 முறை அமர்ந்தும் 8 முறை எழுந்து நின்றும்
அமெரிக்க எம்.பிக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர் என இந்திய ஊடகங்கள் மோடியின்
அமெரிக்க நாடாளுமன்ற உரை குறித்து புகழ்ந்து எழுதிவருகின்றன.
இந்நிலை மோடி ஆற்றிய நாடாளுமன்ற உரை அவருடைய உள்ளத்திலிருந்து தோன்றியது
அல்ல, எதிரே இருக்கும் திரையில் ஓடியது என ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
அதாவது நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றும் போது எதிரே வைக்கப்பட்டிருந்த
நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய எழுத்துத் திரை(டெலிபிராம்ப்ட்)யைப்
பார்த்தே படித்திருக்கிறார். இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட
படங்களிலேயே மோடி முன்பு பிராம்ப்ட் இருப்பது பதிவாகியுள்ளது.
நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய இந்த பிராம்ப்ட் வெளியிலிருந்து பார்க்கும்போது கண்ணாடி போலத் தெரியும். எதிரில் இருப்பவர்களுக்கு மட்டுமே திரையில் எழுத்துக்கள் தெரியும். படிப்பவரின் உச்சரிக்கும் தன்மைக் கேற்ப இந்த பிராம்ப்ட் யாரோ ஒருவர் இயக்குவார். இப்படியான எழுத்துக்களுடன் கூடிய திரையை, 2014 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தப்பட்டபோது இந்திய விண்வெளிக்கழகத்தில் ஆங்கில உரையாற்றியபோது முதன்முதலாக மோடி பயன்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்போதிலிருந்து ஆங்கிலத்தில் உரையாற்றும்போது மோடி இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் செய்திகள் சொல்கின்றன.
அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகைய டெலி பிராம்ப்ட்களைப் பயன்படுத்தி ‘புகழ்’பெற்ற உரைகளை ஆற்றியதால் அமேசான் நிறுவனம் ‘ஒபாமா பிரசிடென்ஷியல் ஸ்பீச் டெலிபிராம்ப்டர்’ என்ற பெயரில் இதை விற்றுக்கொண்டிருக்கிறது.
எப்படியோ, நாடகத்தனமான மோடியின் உடல்மொழிகளுக்குக் கைக் கொடுக்கும் சாதனமாக டெலிபிராம்ப்ட் இருக்கிறது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்தும் நபராகவும் மோடி இருக்கிறார். thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக