வியாழன், 9 ஜூன், 2016

ஒவ்வொரு குடிமகனும் தன் வழக்கில் தானே வாதாடும் உரிமை...மறுக்கும் சைதாப்பேட்டை வழக்கறிஞர்களின் தாக்குதல்

வழக்கறிஞர்கள் அனைவரையும் தலை குனிய வைக்கும் செயலை செய்தவர்கள் மீது அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னுடைய வழக்கில் தானே வாதாட சட்டம் அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது. அது போல வாதாடும் போது நீதிமன்றத்தில் அமரலாம் என்றும் நீதிமன்ற தீர்ப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவான சட்டங்கள் இருந்தும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தனக்காக தானே வாதாட சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவஇளங்கோ அவர்களை கும்பலாக வந்த சில வழக்கறிஞர்கள் ஆளாளுக்கு உங்கள் வழக்கில் வாதாடினால் நாங்கள் எப்படி வக்கீல் தொழில் பார்ப்பது? வழக்கறிஞர்கள் இருக்கையில் அமர உனக்கென்ன உரிமை உள்ளது என்று கூறி தாக்கியுள்ளனர். 

இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகவே தெரிகிறது. ஏற்கனவே தகவல் உரிமை ஆணையத்தில் மேல் முறையீட்டு விசாரணையின் போது ஆணையர் முன்பு நாற்காலியில் அமர்ந்து பேசியதால் சினம் கொண்ட ஆணையர் மற்றும் முன்னாள் நீதிபதி அக்பர் காவல்துறையில் புகார் அளித்து சிவ இளங்கோ அவர்களை 3 நாட்கள் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் விசாரனைக்காகத்தான் இன்று சிவ இளங்கோ நீதிமன்றம் சென்றிருந்தார். மேலும் இந்த விசாரணை ஆரம்பித்த போது நீதிமன்றத்தில் அமருவதற்கு சட்டப்படி இடம் உள்ளதால் அதற்க்கான வசதிகளை செய்து தர வேண்டும் என்று வாதாடி ஒவ்வொரு முறையும் விசாரணையின் போதும் நாற்காலியில் அமர்ந்து தான் விசாரணையை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் இன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்த தாக்குதல் யாருடைய தூண்டுதலில் நடத்தப்பட்டது என்று காவல்துறை முழு விசாரணை நடத்த வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர் தொழிலை தூய்மையாக செய்யும் வழக்கறிஞர்கள் எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள் மீது உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கப்பட்ட இடத்திலேயே தற்பொழுது சிவஇளங்கோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வாய்ப்புள்ளவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் சென்று அவருக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு - Jai Ganesh - 8870472177   

 
சட்ட பஞ்சாயத்து இயக்கம் திருச்சி SPI Trichy Like This Page · May 30 · பகிரவும்.. ரவுடித்தனம் கண்டு அஞ்சமாட்டோம் என்று நிரூபிக்க சைதை நீதிமன்றம் வரவும்.. 8870472177,8754580270,8754580269

கருத்துகள் இல்லை: