கல்வித்
திட்டத்தில் சமஸ்கிருத மொழி மட்டுமே உள்ள
வேதப்பாடத் துறை (வேதிக் போர்டு) வரும் ஜுன் 16 முதல் மத்திய அரசு செயல்படுத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இரானி, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘நமது கலாச்சாரம் என்பது வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல் நமது கலாச்சாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஸ்மிருதி இராணி வேதத்தை எப்படி வளர்த்தாங்க என்று நெறைய flashback நியுஸ் உண்டுங்க
ஆகவே, மத்திய அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் வேத பாடங்கள் பயில, சிறப்பு வேத பாட போதனைப் பிரிவு (வேதிக் போர்டு) ஒன்று உருவாக்கப்படும் என்றும், இதற்கு ‘வேதாஞ்சலி’ என்று பெயர் வைக்கப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து பத்து கிராமங்களுக்குச் சென்று, அம்மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்களின் கலாச்சார, பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினோம். மேலும், ஆயிரத்து ஐநூறு கிராமப்பள்ளி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டோம். இவர்களிடம் பெற்ற ஆலோசனைகளைக் கொண்டு நாங்கள் புதிய கல்வித் திட் டத்தை வரையறை செய்துள்ளோம். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நமது கல்விக் கொள்கைக்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய அரசு, கல்வி விவகாரத்தில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற கல்விமுறையை அப்படியே பின்பற்றியது. அன்றுமுதல் இன்றுவரை அதே கல்விமுறை உள்ளது. இந்தக் கல்விமுறையால் கடந்த ஐந்து தலைமுறையினரின் வாழ்வியலில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்கிலேயர் தன்னுடைய வசதிக்காக இந்தியக் கல்விமுறையை மாற்றிவைத்தனர். அதை, அப்படியே பின்பற்றியதன் விளைவு நாம், நமது கலாச்சாரத்தையே இழிவுபடுத்திப் பேசும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இனி, நமது கலாச்சாரப் பண்பாட்டின் ஊடாகவே நாம் கல்வியைப் பயிலவேண்டும். இனி, நாம் படிக்கும் ஒவ்வொரு பாடமும் நமது பழமையான கலாச்சாரத்தின் கண்ணாடிகளாக இருக்கவேண்டும். நமது வரலாற்றைப்பற்றி நமக்குத் தெளிவாகத் தெரிந்தால்தான் தேசப்பற்று அதிகரிக்கும், தேசத்தின்மீதான இழி பார்வை நீங்கும். மாநிலப் பள்ளிகளில் 70 விழுக்காடு கல்விக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதை, நாங்கள் இந்த ஆண்டிலிருந்து மேற்கொள்ளவிருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, இதுவரையிருந்த நமது கலாச்சாரத்துக்கு ஒவ்வாத கல்விமுறையில் மாற்றம்செய்து, புதிய நமது கலாச்சாரத்தின்மீது அக்கறைகொண்ட அதேநேரத்தில், நம் கலாச்சாரத்தின்வழியாக புதிய உலகை எதிர்கால சந்ததியினர் சந்திக்கும்விதத்தில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த முடிவெடுத்தோம். மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்’ என்று கூறினார்.
‘இது, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை அமல்படுத்தும் பாஜக-வின் செயல்’ என திராவிடர் கழகத்தின் அரசியல் நாளேடு விடுதலை கண்டித்துள்ளது. minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக